»   »  விவேக் உடன் ஜோடி சேரும் உதயநிதி... அப்போ சந்தானம்?

விவேக் உடன் ஜோடி சேரும் உதயநிதி... அப்போ சந்தானம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய அடுத்த படத்தில் விவேக் உடன் காமெடி கூட்டணி அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய ஓகே ஓகே படத்தில் இருந்து காமெடிக்கு சந்தானத்தை ஜோடியாக இணைத்துக்கொண்ட உதயநிதி முதன் முறையாக விவேக் உடன் ஜோடி சேருவதால் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சினிமா தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். ராஜேஸ் இயக்கிய இப்படத்தில் உதயநிதியுடன் காமெடிக்கு நடிகர் சந்தானம் இணைந்தார்.

உதயநிதி – சந்தானம்

உதயநிதி – சந்தானம்

இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா படத்திலும் உதயநிதியுடன் சந்தானமே கூட்டணி அமைத்தார். 'மான் கராத்தே' இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் 'கெத்து' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. ஏமி ஜாக்சன், சத்யராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

அஹ்மத் இயக்கும் படம்

அஹ்மத் இயக்கும் படம்

இப்படத்தைத் தொடர்ந்து 'என்றென்றும் புன்னகை' அஹ்மத் இயக்கவிருக்கும் படத்தில் நடித்து, தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் உதயநிதி. நாயகியாக ஹன்சிகா, பிரகாஷ்ராஜ், ராதாரவி, இசைக்கு சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவுக்கு மதி என படக்குழுவினர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

உதயநிதி - விவேக்

உதயநிதி - விவேக்

தற்போது இப்படத்தில் உதயநிதி உடன் வரும் முக்கிய பாத்திரத்தில் விவேக் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். உதயநிதியுடன் விவேக் இணைந்து நடிக்கும் முதல் படமாக இப்படம் அமையவிருக்கிறது.

இந்திப்பட ரீமேக்

இந்திப்பட ரீமேக்

இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜாலி எல்.எல்.பி' படத்தின் ரீமேக்கான இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இளம் நாயகர்களுடன்

இளம் நாயகர்களுடன்

நடிகர் விவேக் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். தற்போது தனுஷ், ஜெயம் ரவி என இளம் நடிகர்களின் படங்களில் நடித்து வரும் விவேக் முதன்முறையாக உதயநிதி படத்தில் நடிக்கிறார். உதயநிதியின் ஆஸ்தான கமெடியன் சந்தானம் ஹீரோவாக புரமோசன் ஆகிவிட்டதால் உதயநிதி தனது காமெடி கூட்டணியை மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

English summary
Director Ahmed is gearing up for his next, a Tamil remake of the Hindi film Jolly LLB. This film will have Udhayanidhi Stalin and Hansika in the leads supported by Radha Ravi and Prakash Raj. The film is produced by Udhay’s Red Giant Movies with Santhosh Narayanan’s music.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil