»   »  "தாதா" கபாலி போட்ட சட்டை யாரு போட்ட சட்டை?... சொல்லுங்கோ பார்ப்போம்!

"தாதா" கபாலி போட்ட சட்டை யாரு போட்ட சட்டை?... சொல்லுங்கோ பார்ப்போம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தில் இளம் வயது ரஜினி ஒரு காட்சியில் அணிந்து வரும் சட்டை ஏற்கனவே தான் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு படத்தில் அணிந்திருந்த சட்டையின் மாடலில் இருப்பதாக காமெடி நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் இன்று ரிலீசாகியுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே கபாலி கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டன என்றால் மிகையில்லை.

அதிலும் முதன்முறையாக கபாலி டீசர் வெளியான போது, அதில் இளவயது ரஜினி அணிந்திருந்த சட்டை அனைவராலும் பெரிதும் பேசப்பட்டது.

அனுவர்தன்...

அனுவர்தன்...

கபாலி படத்திற்கு இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் மனைவி அனு வர்தன் தான் ஆடை வடிவமைப்பாளர். இவரது உடை தேர்வு மூலம் ரஜினியை இளமையாகவும், ஸ்டைலாகவும் படத்தில் காட்டியிருந்தார்.

நாடு நாடாக...

நாடு நாடாக...

அதிலும் குறிப்பாக வயதான ரஜினியின் கோட் சூட் உடைகளை லண்டனிலும், மற்ற உடைகளை துபாயிலும், இளவயது ரஜினியின் உடைகளை இத்தாலியிலும் வாங்கியதாக அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

வித்தியாசமான சட்டை...

வித்தியாசமான சட்டை...

அதிலும் குறிப்பாக ரஜினி ஆவேசமாக நடந்து வருவது போன்ற காட்சியில் அணிந்து வரும் வித்தியாசமான சட்டை பலரது கவனத்தை ஈர்த்தது. அதை மிகவும் மெனக்கெடுத்து உருவாக்கியதாக அனு கூறியிருந்தார்.

சிரிப்புடா... நெருப்புடா...

சிரிப்புடா... நெருப்புடா...

இந்நிலையில் கபாலி படத்தை அணுஅணுவாக ஆராய்ந்த நெட்டிசன்கள், அது ஏற்கனவே விவேக் ஒரு படத்தில் அணிந்து வந்த சட்டையின் மாடல் என்பதைக் கண்டறிந்தனர். அது சிரிப்புடா, இது நெருப்புடா என இருவரது போட்டோவையும் இணைத்து மீம்ஸ்களும் வெளியிட்டனர்.

தாதா சட்டை...

தற்போது அந்த மீம்ஸை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள விவேக், ‘அது சாதா சட்டை, இது தாதா சட்டை' என்றும், ‘தான் 10 வருடங்களுக்கு முன் 1977 என்ற படத்தில் இதே சட்டை அணிந்தேன். தலைவர் அதையே அணிந்திருப்பது எனக்கு பெருமையே!!" எனத் தெரிவித்துள்ளார்.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..

ஆனாலும் விட்டுத்தராத ரஜினி ரசிகர்கள் வீட்டில் அண்ணன் சட்டையை தம்பியும், தம்பி சட்டையை அண்ணனும் மாற்றிப் போட்டுக் கொள்வது சகஜம் தானே என சப்பைக் கட்டு கட்டி வருகின்றனர்.

English summary
Actor Vivek is proud that Rajini wears a shirt in Kabali, which is of the same design 10 years ago he wore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil