»   »  துப்பறியும் சங்கர்: கமல் நாயகியுடன் 'டூயட்' பாடப்போகும் விவேக்

துப்பறியும் சங்கர்: கமல் நாயகியுடன் 'டூயட்' பாடப்போகும் விவேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேக் அடுத்து நடிக்கவிருக்கும் 'துப்பறியும் சங்கர்' படத்தில் அவருக்கு ஜோடியாக கமாலினி முகர்ஜியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

காமெடி, குணச்சித்திர வேடங்களில் கலந்து கட்டி நடித்து வரும் விவேக் அவ்வப்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். கடைசியாக வெளியான விவேக் நடிப்பில் வெளியான 'பாலக்காட்டு மாதவன்' பெரியளவில் வெற்றி பெறவில்லை.

Vivek- Kamalinee Mukherjee's Thuppariyum Sankar

எனினும் மனம் தளராத விவேக் அடுத்ததாக ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். அப்படத்துக்கு 'துப்பறியும் சங்கர்' என பெயர் சூட்டியுள்ளனர்.

இதில் விவேக் ஜோடியாக 'வேட்டையாடு விளையாடு', 'இறைவி' படங்களில் நடித்த கமாலினி முகர்ஜியை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.

அறிமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தின் கதை 1960 களில் நடப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறதாம். விவேக் இப்படத்தில் துப்பறிவாளராகவும் அவருக்கு ஜோடியாக கமாலினி முகர்ஜியும் நடிக்கின்றனர்.

'துப்பறியும் சங்கர்' படப்பிடிப்பு இந்த வார இறுதியில் சென்னையில் துவங்கவிருக்கிறது.பிற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்தபின் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Vivek Next movie Has been Titled by Thuppariyum Sankar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil