»   »  கருணாநிதி, ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த நடிகர் விவேக்!

கருணாநிதி, ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த நடிகர் விவேக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் விவேக், சமூகப் பணிகளிலும் ஆர்வம் கொண்டவர். அப்துல்கலாமின் கனவுகளை நிறைவேற்றும் திட்டமான கிரீன் கலாம் எனும் அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார் விவேக்.

கிரீன் கலாம் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி, மரம் நடும் விழா ஆகியவை அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.கருணாநிதி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் விவேக்.

நடிகர் விவேக்

நடிகர் விவேக்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கிரீன் கலாம் எனும் அமைப்பை தொடங்கி தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார் நகைச்சுவை நடிகர் விவேக்.

ரஜினிக்கு வாழ்த்து

ரஜினிக்கு வாழ்த்து

சமூகப் பணிகளில் நாட்டம் கொண்ட விவேக், அரசியல் ரீதியான கருத்துகளை படங்களில் மட்டுமல்லாது தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிடுவார். சமீபத்தில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முடிவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் விவேக்.

கருணாநிதியைச் சந்தித்த விவேக்

விவேக், சமீபத்தில் தி.மு.க தலைவர் மு.கருணாநிதியைச் சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். "உலக மூத்த அரசியல் மேதை; எழுத்தாளர்; பேச்சாளர்; மொழி அறிஞர்; கவிஞர்; தமிழைச் செம்மொழி ஆக்கியவர்; சுறுசுறுப்பின் வடிவம்; உழைப்பின் உருவம்" எனக் குறிப்பிட்டுள்ளார் விவேக்.

விவேக் - ஏ.ஆர்.ரஹ்மான் சந்திப்பு

நேற்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் விவேக். தான் நடத்தும் கிரீன் கலாம் வெப்சைட்டை ரஹ்மான் திறந்து பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 'ஒரு உயர்ந்த மகானின் கனவு நினைவாக ஒரு சிறந்த மனிதனின் பங்களிப்பு' எனக் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Actor Vivek is also interested in social work. Vivek has been launched Green Kalam, a plan to fulfill the dreams of Abdul Kalam. In this situation, Vivek has met with DMK leader M. Karunanidhi and music director AR Rahman to greet new year 2018.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X