»   »  சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு இலவச ப்ளாட்டுகள் வழங்கும் நடிகர் விவேக் ஓபராய்!

சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு இலவச ப்ளாட்டுகள் வழங்கும் நடிகர் விவேக் ஓபராய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய், வீர மரணம் அடைந்த சிஆர்பிஎஃப் (Central Reserve Police Force) வீரர்களுக்கு இலவச அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டித் தர உள்ளார்.

அவருடைய கட்டட நிறுவனமான கர்ம் இன்ஃப்ராஸ்ட்ரக்ட்சர் பிரைவேட் லிமிட்டெடின் சார்பில் 25 ப்ளாட்டுகள் வழங்கப் பட உள்ளன.

Vivek Oberoi donates 25 flats to CRPF Martyrs

அவற்றில் நான்கு ப்ளாட்டுகள் , பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்கனவே வழங்கப் பட்டுள்ளன. இன்னும் 21 ப்ளாட்டுகளை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெவ்வேறு காலக் கட்டங்களில் நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இந்த இலவச ப்ளாட்டுகளை வழங்குவதாக விவேக் ஒபராய் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சுனாமியின் உக்கிரம் தாங்காமல் பேரழிவு ஏற்பட்ட போது ஓடோடி வந்து, தமிழகத்திலேயே தங்கி இருந்து நிவாரண உதவிகள் செய்வதவர் விவேக் ஒபராய் என்பது குறிப்பிடத் தக்கது.

சமீபத்தில் அக்ஷய் குமார் 1.08 கோடி ரூபாயை 12 சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கியிருந்தார்.

தற்போது விவேக் ஒபராய் உதவிக் கரம் நீட்ட முன்வந்துள்ளார். இராணுவ வீரர்கள் எல்லையில் தொடர்ந்து பலியாகி வரும் வேளையில், பாதிக்கப்பட்ட் குடும்பங்களுக்கு தனியார் அமைப்புகளும் உதவிக் கரம் நீட்ட வேண்டியது அவசியமானது ஆகும்.

English summary
Bollywood Actor Vivek Oberoi is distributing 25 free flats to kins of CRPF martyrs of different period.. Four of them have been already handed over to the beneficiary families.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil