»   »  இளையராஜா எனும் இசைக் கடலில் கண்டெடுத்த முத்து அனிருத்! - விவேக்

இளையராஜா எனும் இசைக் கடலில் கண்டெடுத்த முத்து அனிருத்! - விவேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளையராஜா என்னும் இசைக் கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிருத், என்று 'ரம்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கூறினார் நடிகர் விவேக்.

'ரம்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் ரிஷிகேஷ்-சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் ஜோடியாக நடித்து உள்ளனர். சாய் பிரசாத் இயக்கி உள்ளார்.

Vivek praises Anirudh

விவேக், நரேன், மியா ஜார்ஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.

இதில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கலந்துகொண்டு பேசியதாவது:

"ரம் திரைப்பட குழுவினரை போன்ற இளம் கூட்டணியோடு பணியாற்றியது, எனக்கு புது உற்சாகத்தை அளித்ததோடு மட்டுமில்லாமல், என்னை மீண்டும் இளமையாகவும் மாற்றி இருக்கின்றது.

நம்முடைய இளைஞர்களின் மனதை இசையால் கவருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.... ஆனால் அதை தன்னுடைய மனதை வருடும் இசையால் செய்திருக்கிறார் அனிருத். அவர் சினிமாவில் அறிமுகமானபோது, 'ஒய் திஸ் கொலைவெறி...' பாடலை கேட்டு நான் அவரை பாராட்டினேன். உயர்ந்த இடத்துக்கு வருவார் என்று நம்பினேன். அது நடந்து இருக்கிறது. இப்போது அவர் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து இருக்கிறார். இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிருத்...," என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அனிருத், "பொதுவாகவே பேய் படங்கள் என்றால் எனக்கு அவ்வளவு பயம்.... அதுமட்டுமன்றி, 13 ஆம் நம்பர் என்பது பேய்களை குறிக்கும் எண் என்பதால், அந்த எண்ணின் மீதும் எனக்கு நயம் தான்..... ஆனால் தற்போது நான் இசையமைத்திருக்கும் இந்த 'ரம்', என்னுடைய 13 ஆவது படம்.... அதுவும் பேய் படம்...," என்றார்.

English summary
In the audio release function of Rum, actor Vivek poured praises on music director Anirudh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil