»   »  கார்த்தியின் காஷ்மோராவில் வடிவேலு அவுட் விவேக் இன்

கார்த்தியின் காஷ்மோராவில் வடிவேலு அவுட் விவேக் இன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கார்த்தி நடிக்கும் காஷ்மோரா படத்தில் காமெடியனாக வடிவேலுவிற்கு பதில் விவேக் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து சில தோல்விப்படங்களை கொடுத்து வந்த கார்த்திக்கு மெட்ராஸ் படத்தின் வெற்றி சற்றே ஆறுதலை கொடுத்தது.

இதனையடுத்து அவர் நடித்துள்ள ரிலீசுக்கு தயாராக உள்ள 'கொம்பன்' திரைப்படம் கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மோரா

காஷ்மோரா

இந்நிலையில் கார்த்தியின் அடுத்தபடமான 'காஷ்மோரா' பட வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் கார்த்தி இரு வேடங்களில் நடிக்க இருக்கிறார். 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பட இயக்குனர் கோகுல் இயக்குகிறார். வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார்.

நயன்தாரா ஜோடியாக

நயன்தாரா ஜோடியாக

இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக நயன்தாரா முதல்முறையாக நடிக்கின்றார். இந்த ஜோடி கெமிஸ்ட்ரி எப்படி ஒர்க் ஆகப்போகிறதோ என்பது கார்த்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

காமெடிக்கு விவேக்

காமெடிக்கு விவேக்

இந்த படத்தின் காமெடி கேரக்டரில் வடிவேலு' நடிப்பதாக முதலில் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்போது வந்த தகவலின்படி, வடிவேலு இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக விவேக் காமெடி கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாறிய சந்தானம்

மாறிய சந்தானம்

கார்த்தியுடன் பல படங்களில் சந்தானம் ஜோடியாக நடித்தார். ஆனாலும் சில படங்களில் இந்த ஜோடி வெற்றி பெறவில்லை. எனவே காமெடியனை மாற்றும் முடிவில் இருந்த கார்த்தியுடன் விவேக் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முதன்முறையாக விவேக்

முதன்முறையாக விவேக்

சூர்யாவுடன் பேரழகன், சிங்கம், சிங்கம் 2, போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் விவேக், கார்த்தி படத்தில் நடிப்பது இதுதான் முதல்முறையாகும்.

English summary
If sources are to be believed, Karthi's Kashmora will have Vivek playing the comic role and not Vadivelu as reported earlier.
Please Wait while comments are loading...