இவரும் இறங்கிட்டார்ல.. ரெடியாகுது விவேக் நாயகனாக நடித்த படத்தின் 2 ஆம் பாகம்! அமெரிக்காவில் ஷூட்டிங்

By

சென்னை: நடிகர் விவேக், ஹீரோவாக நடித்த படத்தின் அடுத்த பாகம் விரைவில் தொடங்க இருக்கிறது.

காமெடி நடிகர் விவேக், லீட் ரோலில் நடித்திருந்த படம், வெள்ளைப் பூக்கள். இதை விவேக் இளங்கோவன் இயக்கி இருந்தார்.

இதில் சார்லி, அஜய் ருத்ரான். பூஜா தேவரியா, பைஜ் ஹென்டர்சன் உட்பட பலர் நடித்திருந்தனர். ராம்கோபால் கிருஷ்ணராஜூ இசை அமைத்திருந்தார்.

போலீஸ் அதிகாரி

போலீஸ் அதிகாரி

இந்தப் படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. விவேக் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் சுற்றி நடக்கும் சம்பவங்களை ஒரு போலீஸ்காரரின் கண்ணோட்டத்துடனே பார்ப்பவராக நடித்திருந்தார்.

மர்ம கொலைகள்

மர்ம கொலைகள்

இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் மகன் வீட்டுக்குச் செல்லும் அவர், அங்கு நடக்கும் மர்ம கொலைகள் பற்றி அறிகிறார். அதை போலீஸ் அதிகாரியாக எப்படி துப்பு துலக்கி, குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பை அமெரிக்காவின் பல பகுதிகளில் நடத்தி இருந்தனர்.

அமெரிக்காவில்

அமெரிக்காவில்

இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதன் திரைக்கதையை எழுதும் பணியில் இயக்குனர் விவேக் இளங்கோவன் ஈடுபட்டுள்ளார். இந்த கதையும் அமெரிக்காவிலேயே நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த விவேக் உள்ளிட்டவர்கள் இதிலும் நடிக்க இருக்கின்றனர். இதன் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

MAFIA MOVIE PRESS MEET | ARUN VIJAY | PRIYA BHAVANI SHANKAR | FILMIBEAT TAMIL
இரண்டாம் பாக படங்கள்

இரண்டாம் பாக படங்கள்

தமிழில், இரண்டாம் பாகப் படங்கள் எடுப்பது அதிகரித்துள்ளது. ரஜினிகாந்தின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா இரண்டாம் பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படம் 3 பாகங்கள் வந்தது. சாமி, சண்டக்கோழி, மாரி, கலகலப்பு, காஞ்சனா, திருட்டுப்பயலே உள்ளிட்ட மேலும் பல படங்களின் 2-ம் பாகங்கள் வந்தன. இந்நிலையில் விவேக்கின் வெள்ளைப்பூக்கள் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X