»   »  'நண்பா உனக்கெதற்கு விருது? நீதான் எங்கள் விருது'... விக்ரமிற்கு ஆறுதல் சொன்ன விவேக்

'நண்பா உனக்கெதற்கு விருது? நீதான் எங்கள் விருது'... விக்ரமிற்கு ஆறுதல் சொன்ன விவேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்காதது அவரின் ரசிகர்கள் தொடங்கி நட்சத்திரங்கள் வரை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

2 வருடங்களுக்கு மேலாக விக்ரம் தன்னுடைய முழு உழைப்பையும் கொட்டி ஐ படத்தில் நடித்திருந்தார். ஆனால் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் விக்ரமின் பெயர் இடம்பெறவில்லை.

இதுகுறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

Vivek said Comfort to Vikram

இந்நிலையில் நடிகர் விவேக் கவிதை வடிவில் விக்ரமிற்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.

"நண்பா விக்ரம்,"ஐ" காக உடலை பெருக்கினாய்;
பின் சுருக்கினாய்; அகோர உருவில் உயிர் உருக்கினாய்;
உனக்கெதற்கு விருது? நீதான் எங்கள் விருது!.

என்று கூறியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் விக்ரமிற்கு விருது கிடைக்காதது தேசிய விருதுக்கு ஏற்பட்ட இழப்பு என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

மேலும் சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் விக்ரமிற்கு விருது கிடைக்காதது வருத்தமே, என்று கருத்துத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
This Time Actor Vikram Lost National Award, Now Vivek Said Comfort to Vikram.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil