»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகர் விவேக் இப்போதெல்லாம் சினிமா விழாக்களை தொகுத்து வழங்குவதில் காமெடி கலந்து கலக்கி வருகிறார். படையப்பா படத்தின் வெற்றிவிழாவை இவர் தொகுத்து வழங்கியதற்காகவே இவருக்கு ரஜினி ஒரு தங்க செயின் பரிசளித்தார்.

ஆனால் சமயங்களில் காமெடியாக நட்சத்திரங்களைஅறிமுகம் செய்து வைக்கிறேன் என்ற பெயரில் காயப்படுத்திவிடுகிறார்.

சமீபத்தில் நடந்த அப்பு கேசட் வெளியீட்டு விழாவில், பாக்யராஜை அறிமுகப்படுத்திய போது இவர் திரைக்கதை அமைப்பதில் கில்லாடிதான், ஆனால்வேட்டியை மடித்துக் கட்டாமல் விட்டுவிட்டார் என்று கமென்ட் அடித்தார்.

அதைக்கேட்ட பாக்யராஜின் குருவான பாரதிராஜாவுக்கு கோபம்வந்து விட்டது. இப்படி எல்லாம் விமர்சிக்கக் கூடாது என்று கண்டித்தார்.

Read more about: casette, release, tamil cinema, vivek
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil