»   »  இன்று தமிழ்நாடே ஒரு "அடங்கா நல்லூர்" save jallikattu: விவேக்

இன்று தமிழ்நாடே ஒரு "அடங்கா நல்லூர்" save jallikattu: விவேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களை நடிகர் விவேக் வெகுவாக பாராட்டியுள்ளார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் மாபெரும் அமைதிப் புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது. இளைஞர்களும், மாணவ-மாணவியரும் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து விவேக் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அடங்கா நல்லூர்

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு அலங்காநல்லூர் !- ஆனால் இன்று
தமிழ்நாடே ஒரு "அடங்கா நல்லூர்" save jallikattu support jallikattu

விவசாயிகள்

ஜல்லிக்கட்டு வெற்றிப்படிக்கட்டை நெருங்கி விட்டது.நேற்று அதை மெரினாவில் நேரில் கண்டேன்.அடுத்து நம் இலக்கு விவசாயிகள்!

மெரினா

இங்கிருந்து 💯இளைஞர்களைக் கொடுங்கள்.இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்-விவேகானந்தர் அன்று மெரினாவில் சொன்னார்!இன்று அது நடக்கிறது பன்மடங்காய்!

காளைகள்

காளைகள்

உறுமும் சிங்கம் எழுந்துவிட்டது!
உணர்ச்சித் தீ கொழுந்து விட்டது!
மச்சி...அவுத்து விட்றா காளைகளை! அடிச்சு விரட்ரா கோழைகளை!

நாளையும் நமதே!

இந்த அறப்போராட்டத்தில் எல்லா இன,மொழி, மத அமைப்பு இளைஞர்களும் இணைந்துவிட்டனர்.இது இப்படியே தொடர்ந்தால் காளையும் நமதே!நாளையும் நமதே!

English summary
Actor Vivekh who went to Marina beach to show his support for Jallikattu protest has appreciated the youths on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil