»   »  நயன்தாராவை வம்பிழுத்த விவேக்?: உண்மை என்ன?

நயன்தாராவை வம்பிழுத்த விவேக்?: உண்மை என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்டிமென்ட்டை காரணம் காட்டி பட விழாக்களை புறக்கணிக்கும் நாயகிகள் இறுதிகட்ட சம்பளத்தை வாங்கினாலும் படம் ஓடாது என்று நினைத்தால் தயாரிப்பாளர்களுக்கு நல்லது என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள காஷ்மோரா படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு நயன்தாரா வரவில்லை. இந்நிலையில் சென்னையில் நடந்த காஷ்மோரா பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விவேக் நடிகைகளின் சென்டிமென்ட் பற்றி பேசினார்.

இது குறித்து விவேக் கூறுகையில்,

ஹீரோயின்கள்

ஹீரோயின்கள்

தற்போது சில ஹீரோயின்கள் தங்களின் பட விழாக்களில் கலந்து கொள்வது இல்லை. அதற்கு தக்க பதிலும் வைத்துள்ளார்கள். அதை நான் தவறாக சொல்லவில்லை.

படங்கள்

படங்கள்

தாங்கள் பட விழாக்களுக்கு வந்தால் படம் ஓடுவது இல்லை என்று சென்டிமென்டாக பதில் அளிக்கிறார்கள். அப்படி என்றால் தங்களின் இறுதிகட்ட சம்பளத்தை வாங்கினாலும் படம் ஓடாது என்று அந்த ஹீரோயின்கள் சென்டிமென்டாக கூறினால் தயாரிப்பாளர்களுக்கு நல்லது. தயாரிப்பாளர்கள் மகிழ்வார்கள் என்றார் விவேக்.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா தான் பட விழாக்களில் கலந்து கொண்டால் அந்த படம் பப்படமாகிவிடும் என்று கூறி தவிர்த்து வருகிறார். இந்நிலையில் விவேக் பெயரை குறிப்பிடாமல் கூறியது நயன்தாராவுக்கு பொருந்தும் என்று ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

விவேக்

நயன்தாராவை தாக்கிப் பேசிய விவேக் என்ற செய்திகளை பார்த்த அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மீடியாவுக்கு ஒரு கோரிக்கை. ஹீரோயின்கள் பட விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று தான் கூறினேனே தவிர நயன்தாராவை குறிப்பாக கூறவில்லை. நான் அவரின் மிகப்பெரிய ரசிகன். நயனை பற்றி நான் போட்டுள்ள ட்வீட்டுகளை பார்க்கவும் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Actor Vivekh tweeted that, 'An appeal to media. I stated tat heroines shd attend promos.i didn't pinpoint Nayan.i m a huge fan of her. Plz recall my tweets on Nayan.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil