twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா வைரஸ் இறந்தவர்கள் உடலில் இருக்காது.. எரித்தாலும் புதைத்தாலும் ஆபத்தில்லை. நடிகர் விவேக்!

    By
    |

    சென்னை: மருத்துவர்கள் நடமாடும் தெய்வங்கள் என்றும் இறந்த பிறகு அவர்களை அவமானப்படுத்தக் கூடாது என்றும் நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Recommended Video

    கொரோனா வைரஸ் இறந்தவர்கள் உடலில் இருக்காது.. எரித்தாலும் புதைத்தாலும் ஆபத்தில்லை. நடிகர் விவேக்!

    சென்னையில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த நரம்பியல் துறை மருத்துவர் அந்த வைரஸால் பாதிப்பால் நேற்று உயிரிழந்தார்.

    அவரை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய உடல் கொண்டு சென்றனர். அப்போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினர்.

    ஷுட்டிங் போகனும்னு சேனல் சொல்லல.. குஷ்புவின் வாய்ஸ் நோட்டு குறித்து நடிகை ராதிகா விளக்கம்!ஷுட்டிங் போகனும்னு சேனல் சொல்லல.. குஷ்புவின் வாய்ஸ் நோட்டு குறித்து நடிகை ராதிகா விளக்கம்!

    சென்னை மாநகராட்சி

    சென்னை மாநகராட்சி

    டிரைவரையும் தாக்கினர். இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த 20 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இதுகுறித்து சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, சென்னை மாநகராட்சி உடல்களை கவனமாக தகனம் செய்ய எல்லா விதிமுறைகளையும் பின்பற்றுகிறது.

    முழு பாதுகாப்பு

    முழு பாதுகாப்பு

    இறந்த நபர்களின் சடலத்திலிருந்து எந்தவொரு நோய்ப் பரவலையும் பற்றி மக்கள் கவலைப்படவோ பயப்படவோ தேவையில்லை. நாங்கள் அதனை பாதுகாப்பான முறையில் கையாளுகிறோம். இந்த விஷயத்தில் நம் சமூகத்திற்கான முழு பாதுகாப்பை உங்களுக்கு உறுதியளிக்கிறோம். நம் உலகத்திலிருந்து செல்பவர்களை மதிப்புடனும் மரியாதையுடனும் அனுப்பி வைப்போம்' என தெரிவித்திருந்தது.

    விவேக் வேண்டுகோள்

    விவேக் வேண்டுகோள்

    இந்நிலையில், நடிகர் விவேக் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவர் ஒருவர் இறந்தால் கூட போலீஸ் பாதுகாப்போட அடக்கம் செய்ய வேண்டிய நிலை இன்னைக்கு இருக்கு. கோவிட் 19 நோய் தொற்று உள்ளவங்களுக்கு சிகிச்சை அளித்து, அதனால அவர் பாதிக்கப்பட்டு இறந்திருக்கார். அவர் உடலை அடக்கம் பண்ண மக்கள் தகராறு பண்றாங்க. ஏன்னா, தொற்று பரவிரும்னு பயப்படறாங்க.

    பயப்பட வேண்டாம்

    பயப்பட வேண்டாம்

    சில மருத்துவ உண்மைகள் புரியலைன்னு நினைக்கிறேன். கொரோனா வைரஸ் இறந்த உடல்ல இருக்காது. அதனால் எரித்தாலும் புதைத்தாலும் எந்த ஆபத்துமில்லை. பயப்பட வேண்டாம். மருத்துவர்கள் இப்ப நடமாடும் தெய்வங்கள். அவர் இருக்கும்போது கொண்டாட முடியலைன்னாலும் இறந்த பிறகாவது அவரை அவமானப்படுத்தாம இருக்கணும். மனித நேயத்தை காப்போம் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor vivekh says that no disease will spread from deceased bodies. doctors are god.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X