»   »  அறிவுப் பெருவெளியாக இருக்கவேண்டிய பொதுவெளி காமக் கழிவிடமாய் மாறி வருகிறது: விவேக்

அறிவுப் பெருவெளியாக இருக்கவேண்டிய பொதுவெளி காமக் கழிவிடமாய் மாறி வருகிறது: விவேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அறிவுப் பெருவெளியாக இருக்கவேண்டிய பொதுவெளி,தற்போது காமக் கழிவிடமாய் மாறி வருகிறது என நடிகர் விவேக் வேதனை தெரிவித்துள்ளார்.

பாடகி சுசித்ரா தனது ட்விட்டர் கணக்கில் தனுஷ், அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா, த்ரிஷா உள்ளிட்டோரின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டார்.

அதன் பிறகு சுசிலீக்ஸ் #suchileaks என்ற ஹேஷ்டேக்கில் திரையுலக பிரபலங்களின் பலான வீடியோக்கள் வெளியாகின.

விவேக்

சுசிலீக்ஸ் பற்றி பெயரை குறிப்பிடாமல் நடிகர் விவேக் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அறிவுப் பெருவெளியாக இருக்கவேண்டிய பொதுவெளி,தற்போது காமக் கழிவிடமாய் மாறி வருகிறது.stop this.இது விபரீதம்.பெண்மை போற்றுவோம்.hpy women's day! என தெரிவித்துள்ளார்.

இடிக்குதே

@Actor_Vivek தல வர வர உங்க நடவடிக்கை ஏதும் சரி இல்ல , எங்கையோ இடிக்குதே 🤔🤔🤔🤔🤔🤔🤔 என விவேக்கின் ட்வீட்டை பார்த்த ரசிகர் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

மறவாதீர்

@Actor_Vivek இதற்க்கு சினிமா துறையும் ஒரு காரணம் மறவாதீர் என மற்றொருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

ஒழுக்கம்

@Actor_Vivek சரியான பதிவு, சரியான நேரத்தில். தனிமனித ஒழுக்கம் அவசியம், எந்த துறையில் இருந்தாலும் என ஒருவர் விவேக்கை பாராட்டியுள்ளார்.

English summary
Actor Vivekh took to twitter to express his concern about obscene materials getting circualted on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil