»   »  தன்ஷிகா அழுதபோது மேடையில் சிரித்த 2 பேர்: யார் அவர்கள்?

தன்ஷிகா அழுதபோது மேடையில் சிரித்த 2 பேர்: யார் அவர்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
தன்ஷிகாவை பார்த்து சிரித்த கிருஷ்ணா, விதார்த்-வீடியோ

சென்னை: ஒரு பெண்ணை அவமானப்படுத்தியபோது மேடையில் இருந்த இரண்டு ஆண்கள் சிரித்துள்ளது எரிச்சல் அடைய வைத்துள்ளது என்று தன்ஷிகா விவகாரம் பற்றி நடிகை ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

விழித்திரு செய்தியாளர் சந்திப்பின்போது டி. ராஜேந்தரின் பெயரை குறிப்பிட நடிகை தன்ஷிகா மறந்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த டி.ராஜேந்தர் தன்ஷிகாவை மேடையில் வைத்தே கடுமையாக சாட அவர் அழுது மன்னிப்பு கேட்டும் விடவில்லை.

இந்த சம்பவத்தையடுத்து திரையுலக பிரபலங்கள் தன்ஷிகாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டி.ஆர்.

டி.ஆர்.

ஒரு நடிகை தனது பெயரை குறிப்பிட மறந்துவிட்டதற்காக இப்படியா நடந்து கொள்வது என்று ஆளாளுக்கு டி.ஆர். மீது கோபப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களிலும் இது பற்றி தான் பேச்சாக கிடக்கிறது.

ஸ்ரீப்ரியா

சாய் தன்ஷிகாவுக்கு ட்விட்டர் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளார் சீனியர் நடிகை ஸ்ரீப்ரியா. டியர் தன்ஷிகா, தெரியாமல் செய்ததற்கு இப்படி ஒரு ரியாக்ஷன். ஒரு பெண்ணை அவமதிக்கும்போது மேடையில் இரண்டு ஆண்கள் சிரித்தது மேலும் எரிச்சல் அடைய வைத்துள்ளது. அழாதே தன்ஷிகா என்று ஆறுதல் கூறியுள்ளார் ஸ்ரீப்ரியா.

விதார்த்

விதார்த்

தன்ஷிகா டி.ஆரிடம் திட்டு வாங்கி அழுதபோது விதார்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் தான் சிரித்தனர் என்று நெட்டிசன்கள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

முக்கியம்

ஸ்ரீப்ரியாவின் ட்வீட்டை பார்த்து ரொம்பவும் முக்கியமான பிரச்சினை இப்போ என்று கேட்டவருக்கு அவர் அளித்துள்ள பதில், கண்டிப்பாக கண்டிப்பது முக்கியம்!இது முக்கியமா அது முக்கியமா என்று கேட்பது தான் நம்மிடம் உள்ள பெரும் பிரச்சனை.

English summary
Senior Actress Sripriya has come in support of Sai Dhanshika who was insulted by T. Rajendhar during the press meet of Vizhithiru movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil