ப்ளூ சட்டை மாறனை போட்டு பொளந்து கட்டிய இணையவாசி.. ஊதிப் பெரிதாக்கிய VJ ஆதவன்.. இது லிஸ்ட்லயே இல்லையே
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியான படம் பைசன். இந்த படம் கடந்த 17ஆம் தேதி இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸாக வெளியானது. பைசன் - காளமாடன் என்ற டேக் லைனுடன் வெளியான இந்த படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர், மதன் உள்ளிட்ட பலரது நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்திற்கான விமர்சனத்தை தெரிவிக்கும்போது, ப்ளூ சட்டை மாறன் தனது ஸ்டைலில் விமர்சித்தார். அதற்கு இணைய வாசி ஒருவர் பதிவிட்டிருந்த கமெண்ட்டை நடிகர் மற்றும் வி.ஜே. ஆதவன் மேற்கோள் காட்டி கலாய்த்து தள்ளி உள்ளார்.
பைசன் படத்தை பொறுத்தவரையில் தூத்துக்குடி மாவட்டம் மணத்தி என்ற ஊரைச் சேர்ந்த கணேஷன் என்ற கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம். இவர் இந்திய அணிக்காக கபடி விளையாடி, தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தவர். இது மட்டும் இல்லாமல், இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருதை வென்றவர் மணத்தி கணேஷன்.

படத்தின் கதை என்பது மணத்தி கணேஷன் எப்படியான இன்னல்களை எல்லாம் எதிர்கொண்டு, இந்திய அணிக்கான கபடி வீரராக தேர்வாகி, தங்கப்பதக்கம் வென்றார் என்பதுதான் படத்தின் கதை. இப்படி இருக்கையில், அந்த கதையை மாரி செல்வராஜ் தனது திரைமொழியில், அழகாகச் சொன்னது மட்டும் இல்லாமல், நான் லீனியரிலும் படத்தை எடுத்துச் சென்றார். அதாவது படத்தின் முதல் காட்சியே, கிளைமாக்ஸ் காட்சியின் முந்தைய காட்சி. அப்படி இருக்கையில், கதாநாயகன் இந்திய அணிக்காக தேர்வாகிவிடுகிறார் என்பதுதான் காட்சியாக இருக்க முடியும்.
ப்ளூ சட்டை மாறன்: இப்படி இருக்கையில், இதனை ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில், " படத்தின் முதல் காட்சியை சுட்டிக் காட்டி, இவர்தான் இந்திய அணிக்கு தேர்வாகி விடுகிறாரோ, இவர் கையை உடைத்தால் அவருக்கு என்ன ஆகிவிடப்போகிறது. இவர் கஷ்டப்பட்டதை படமாக காட்டுவதால் என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகிறது, அவர்தான் இந்திய அணிக்காக தேர்வாகி விடுகிறாரே என்று எல்லாம் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார்.

விளாசல்: இப்படி இருக்கையில், நடிகர் மற்றும் VJ ஆதவன் தனது யூடியூப் பக்கத்தில், ப்ளூ சட்டை மாறனும் அவரது அந்த விமர்சனத்திற்கு இணைய வாசி ஒருவரது கமெண்ட்டையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். அதாவது முதலில் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் சொன்னதை குறிப்பிட்ட அவர், அதன் பின்னர் இணைய வாசி ஒருவர்," நாமெல்லாம் இறந்து விடுவோம் என்று தெரியும் தானே, அப்படி என்றால் எதற்காக பிறக்க வேண்டும்? நாமெல்லாம் டைவர்ஸ் செய்து விடுவோமே அதன் பின்னர் எதற்காக திருமணம் செய்ய வேண்டும் என்பது போல கமெண்ட் போட்டிருந்தார். உண்மை அது தான், எப்படியும் ப்ளூ சட்டை மாறன் கழுவி தான் ஊத்த போகிறார் அப்படி இருக்கும்போது அவரது விமர்சனத்தை எதற்காக பாரக்க வேண்டும் என்பது போலத்தான் இருந்தது" என்று பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











