For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தீமை தான் வெல்லும்.. அர்ச்சனாவின் அதிரடி என்ட்ரி.. மொட்டையை மட்டும் இல்ல எல்லாரையும் செஞ்சிட்டாங்க!

  |

  சென்னை: ஜீ தமிழில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட வாய்க்கா தகராறு காரணமாக அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்கிற தகவல் பிக் பாஸ் துவக்க விழாவின் போது வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

  இந்நிலையில், எல்லா செட்டில்மென்ட்டையும் பக்காவாக முடித்து விட்டு, பிக் பாஸ் வீட்டுக்குள் 17வது போட்டியாளராக நுழைந்துள்ளார்.

  இந்த வாரம் ஒருவர் வெளியேற உள்ள நிலையில், அதை இவர் பக்காவாக சமன் செய்து விடுவார்.

  டர்ராக்கிய அர்ச்சனா.. ஒவ்வொருத்தருக்கும் ஒருபட்டம்.. செம காண்டில் ஹவுஸ்மேட்ஸ்!டர்ராக்கிய அர்ச்சனா.. ஒவ்வொருத்தருக்கும் ஒருபட்டம்.. செம காண்டில் ஹவுஸ்மேட்ஸ்!

  தீமைதான் என்ட்ரி

  தீமைதான் என்ட்ரி

  விஜய் டிவியின் செல்லப் பிள்ளை என்பதால், ரியோவுக்கு தனி ஒருவன் படத்தில் இருந்து தீமை தான் வெல்லும் என்ற பாட்டை போட்ட உடனே, அய்யோ யாரோ வராங்க என கெஸ் பண்ணி சொல்லிட்டாரு. அவர் சொன்ன அடுத்த நொடி, பிக் பாஸ் வீட்டின் என்ட்ரி கேட் திறக்கப்பட்டு, விஜே அர்ச்சனா அசத்தல் என்ட்ரி கொடுத்தாங்க.

  ஓவர் ரியாக்‌ஷன்ஸ்

  ஓவர் ரியாக்‌ஷன்ஸ்

  கொஞ்சம் பிக் பாஸ் எக்ஸ்ட்ரா காசு கொடுத்துருப்பாரு போல, வீட்டுக்குள்ள நுழையும் போதே, மொட்டை தலையை தட்டுவது போலவும், தனது ஆடையை தூக்கிப் பிடித்துக் கொண்டு, வேல்முருகனை வேற லெவல் ரியக்‌ஷன் கொடுத்து வம்பிழுத்தது என அர்ச்சனாவின் ஓவர் ரியாக்‌ஷன் ரசிகர்களுக்கு கொஞ்சம் கடுப்பை கிளப்பியதுன்னு தான் சொல்லணும்.

  மொட்டைக்கு ஆரத்தி

  மொட்டைக்கு ஆரத்தி

  மொட்டை தல சுரேஷை டார்கெட் பண்ண வேண்டியே இவரை அனுப்பியது போல, வந்ததும் வராததுமாக, அவருக்கு ஆரத்தி எல்லாம் எடுத்து, ஊர் முழுக்க உங்களை பத்தித்தான் பேச்சு என அர்ச்சனா அவரை வச்சு செய்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. மொட்டை தாத்தாவை இவர் ஓட விடுறாரா? இல்லை அர்ச்சனைவை அவர் ஓட விடுகிறாரா என்கிற சம்பவத்தை பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங்.

  ஆர்வக்கோளாறு அனிதா

  ஆர்வக்கோளாறு அனிதா

  அக்கா, வெளியே என்னப் பத்தி என்ன பேசிக்கிறாங்க என ஆர்வக்கோளாறாக அனிதா அர்ச்சனாவிடம் கேட்க, சொல்றேன் சொல்றேன் சொல்லத்தானே வந்திருக்கேன் என்பது போல, அர்ச்சனா மறுபடியும் ஓவர் ஆக்டிங் பண்ணி எரிச்சல் ஊட்டினார். அதன் பிறகு அனிதாவுக்கு பிக் பாஸ் டிரெண்டிங் பட்டத்தை வழங்கிய போது, இது நெகட்டிவாகவும் இருக்கலாம், பாசிட்டிவாகவும் இருக்கலாம் என பொடிவைத்தார்.

  ஷிவானியை தேடிய அர்ச்சனா

  ஷிவானியை தேடிய அர்ச்சனா

  ஒவ்வொருவராக தேடி வந்து அர்ச்சனாவிடம் பேசிய நிலையில், பாலாஜியும் ஷிவானியும் தான் அவர் வந்ததை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் அவங்க வேலைகளில் பிசியாக இருந்தனர். ஷிவானியை தேடி வந்து பேசிய அர்ச்சனா, ஷிவானியை காணோம், ஷிவானியை காணோம்னு எல்லாரும் தேடிட்டு இருந்தாங்க, நானும் தேடினேன் என அவரிடம் பேசினார். அதன் பிறகு, ஷிவானிக்கிட்ட இருக்கிற லீடர் ஷிப் வெளிய வரணும் என்றும் அட்வைஸ் பண்ணினார்.

  பட்டம் கொடுத்து அசிங்கப்படுத்தி

  பட்டம் கொடுத்து அசிங்கப்படுத்தி

  பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததும் வராததுமாக அர்ச்சனாவை அனைவரிடமும் மோத விட்டு விளையாட ஆரம்பித்து விட்டார் பிக் பாஸ். புரமோ வீடியோக்களிலேயே அவர் யாருக்கு என்ன பட்டம் கொடுக்கிறார் என்பதையும், அவர்கள் ரியாக்‌ஷனையும் காட்டிய நிலையில், நிகழ்ச்சி இன்னும் சூடு பிடித்தது. பாலாஜி, ஷிவானி, சனம் எல்லாம் பார்வையாலே அர்ச்சனாவை பொசுக்கி விட்டனர் என்றே சொல்லலாம்.

  மொட்டையை ஓட விடுவாரா

  மொட்டையை ஓட விடுவாரா

  பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் இதுவரை டாப் நாட்ச் போட்டியாளராக திகழ்ந்து வரும் சுரேஷ் சக்கரவர்த்தியை பீட் பண்ணி ஓட விடுவாரா நம்ம ஜி தமிழ் அர்ச்சனா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். அனிதா சம்பத்துக்கு தான் அர்ச்சனா என்ட்ரியால் ரொம்ப பிரச்சனை ஆகுமோ என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  English summary
  Finally Zee Tamil anchor VJ Archana entered into Bigg Boss Tamil 4 house as a contestant. Her entry was just an awesome one.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X