என்னப்பா சண்டை மூட்டிவிட பாக்குறீங்களா.. அதெல்லாம் செல்லாது.. யோகிபாபு சர்ச்சையில் VJ பாவனா அதிரடி!

சென்னை: இணையத்தில் கடந்த சில தினங்களாக உலா வந்த சர்ச்சை வீடியோக்களில் ஒன்று, ரவி மோகன் ஸ்டூடியோஸ் திறப்பு விழாவின் போது நடிகர் யோகி பாபுவை தொகுப்பாளினி பாவனா கலாய்த்த சம்பவம் தொடர்பான வீடியோ தான். அந்த வீடியோவைப் பார்த்த பலரும் குறிப்பாக யோகி பாபு ரசிகர்கள், பாவனா இதேபோல் மற்றொரு நடிகரிடம் நடந்து கொள்ள முடியுமா என்று கேட்டு வீடியோ பகிர்ந்தார்கள். இதனால் பலரும் பாவனாவை திட்டி வந்தார்கள். இந்நிலையில் பாவனா அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " மக்களே எனக்கு அதிர்ச்சியாக இருக்கு. நானும் யோகி பாபுவும் ஜாலியாக பேசிக் கொண்டதை பலரும் தவறான கோணத்தில் பார்த்து, அதை பகிர்ந்து வருகிறார்கள். இதற்கு முன்னர் நானும் யோகி பாபுவும் ஜாலியாக பேசிக் கொண்டதை எல்லாம் நீங்கள் பார்த்துள்ளீர்களா? குறிப்பாக ஐபிஎல் சமயங்களில் சி.எஸ்.கே போட்டியின் போது? நாங்கள் அதேபோல மிகவும் ஜாலியாக பேச தான் முயற்சித்தோம். மேலும் நான் கேள்விகளை என்ன அர்த்தத்தில் கேட்கிறேன் என்பதை யோகி பாபு நன்றாகவே புரிந்து கொண்டார். அதனால்தான் அவரும் அதற்கு ஏற்றவாறு பதில் அளித்தார்.

உள்ளடி வேலைகள்: எங்கள் இருவருக்குள்ளும் பல ஆண்டு கால பழக்கம் உள்ளது. பல நிகழ்ச்சியில் அவ்வப்போது சந்தித்துக் கொள்வதில் இருந்தே எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. சில முட்டாள் மக்கள் நாங்கள் இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டு இருந்ததை தேவையில்லாமல், ஏதோ எங்களுக்கு இடையில் ஈகோ பிரச்னையை உருவாக்குவது போல நினைத்து சில உள்ளடி வேலைகள் பார்க்கிறார்கள். ஆனால் அதெல்லாம் இங்கு பலிக்காது. நாங்கள் இருவரும் நிகழ்ச்சி முடிந்து கூட ஜாலியாகத்தான் பேசிக் கொண்டோம்.

VJ Bhavana Gives Terrific Reply To Netizens Who Try To Made Fight Between Yogi Babu
Photo Credit:

வேறு வேலை இருந்தா பாருங்க: அதனால் நெகடிவிட்டியை பரப்புவதை விட்டுவிட்டு வேறு வேலை இருந்தால் போய் பாருங்கள்" என்று பாவனா குறிப்பிட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல் இந்த ஸ்டோரி உடன் யோகி பாபுவையும் டேக் செய்துள்ளார். தற்போது பாவனாவின் இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X