For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வி.ஜே.சித்ரா டூ முல்லை… தற்கொலை தீர்வாகாது.. ரசிகர்கள் குமுறல் !

  |

  சென்னை : நடிகை ஷோபனா, சில்க் ஸ்மிதா தொடங்கி விஜே சித்ரா என இன்று வரை தற்கொலைகள் தொடர்ந்து கொண்டுத்தான் இருக்கின்றன.

  தற்கொலை ஒரு கன நேரத்தில் எடுக்கும் முட்டாளின் முடிவு என்றாலும் அந்த முடிவை அவ்வளவு எளிதில் எடுத்துவிட முடியாது. அதற்காக பல முறை மனதளவில் இறந்து ஒத்திகை பார்த்திருக்க வேண்டும். மனம் பார்த்த பல ஒத்திகையில் இறுதியாக ஒரு நாள் மரணிப்பது உடல் மட்டுமே.

  பெயர், புகழ், ஆடம்பரம், அனைவரும் பிரமிக்கும் ராஜ போக வாழ்வு வாழ்ந்தவர்களின் மறு பக்கம் , சோகங்களும் வலிகளும் நிறைந்ததாக இருக்கின்றன. மனதின் வலிகளை அரிதாரத்தை பூசி மறைத்துவிட முடியாது என்பதற்கு வி.ஜே சித்ராவின் தற்கொலை ஒரு எடுத்துக்காட்டு.

  இன்ஸ்டாகிராம், ட்விட்டர் , பேஸ் புக் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ஊடுருவி மனதிற்குள் புகுந்து தீராத கவலையில் ஆழ்த்திய செய்தி வி.ஜே. சித்ரா தற்கொலை முடிவு ரசிகர்களை மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது.

   எம்.எஸ்.சி சைக்காலஜி

  எம்.எஸ்.சி சைக்காலஜி

  28 வயதே ஆன சித்ரா 1992ம் ஆண்டு மே 2ந் தேதி பிறந்தார். இவருக்கு ஒரு அண்ணனும் ஒரு அக்காவும் இருக்கிறார்கள். இவர் பிஎஸ்.சி சைக்காலஜி எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியிலும், எம்.எஸ்.சி சைக்காலஜி சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியிலும் முடித்துள்ளார்.

   தொகுப்பாளர்

  தொகுப்பாளர்

  இவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தால் படிக்கும் போதே மாடலிங், விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் முதன் முறையாக மக்கள் தொலைக்காட்சியில் பத்து நிமிட கதைகள், சட்டம் சொல்வது என்ன , நொடிக்கு நொடி அதிரடி , ஊர் சுத்தலாம் வாங்க, என் சமையல் அறையில் இப்படி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

   இதயங்களை வென்றார்

  இதயங்களை வென்றார்

  இப்படி படிப்படியாக தனது அயராத உழைப்பால் தனது திறமையை வளர்ந்து கொண்ட சித்ரா, ஜெயா டிவியில் ஒளிபரப்பான மன்னன் மகள் என்ற தொடரில் வைஷாலி என்ற கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்தார். அதைத் தொடர்ந்து இவருக்கு பல தொலைக்காட்சிகளிலும் வாய்ப்புகள் வந்தன. சன் டிவியில் நகைச்சுவை தொடரான சின்னப்பாப்பா பெரியப்பாப்பா என்ற காமெடி தொடரில் நடித்து, தனக்கும் காமெடி வரும் என்று ஒரு கலக்கு கலக்கினார் சித்ரா.

   தனி ரசிகர் கூட்டம்

  தனி ரசிகர் கூட்டம்

  விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீசன்2 மற்றும் சீசன் 3ல் நடித்து இல்லத்தரசிகளின் மனங்களை வென்றார் சித்ரா. இறுதியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தையை பெற்றுள்ளார் சித்ரா. அந்த தொடரில் கதிர் மற்றும் சித்ராவின் ஜோடியை பார்ப்பதற்காக ஒரு கூட்டம் உள்ளது.

   1.5 மில்லியன் பாலோவர்ஸ்

  1.5 மில்லியன் பாலோவர்ஸ்

  சீரியல்களில் என்னத்தான் பிசியாக இருந்தாலும் இவர் ரசிகர்களுக்கு சிறிதும் குறைவைக்காமல் பல விதவிதமான புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் இவருக்கு 1.5 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர். இவர் இறப்பதற்கு முன்பாகக் கூட ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் என்பது தான் மனவேதனை.

   பதிவு திருமணம்

  பதிவு திருமணம்

  இரண்டு மாதங்களுக்கு முன்பு தொழிலதிபர் ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது வருங்கால கணவரை அனைவருக்கும் அறிமுகம் செய்து மகிழ்ச்சி அடைந்தார் சித்ரா. மேலும் இவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

   தூக்கிட்டு தற்கொலை

  தூக்கிட்டு தற்கொலை

  இந்நிலையில் ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படப்பிடிப்பை முடித்த சித்ரா தனது ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தன்னுடைய கணவருடன் ஹோட்டலில் தங்கி இருந்த சித்ரா, குளிக்க செல்வதாக கூறி ஹேம்நாத்தை வெளியே செல்ல சொன்னதாகவும் வெகுநேரமானதால் அறையின் கதவை தட்டியதாகவும் ஹேம்நாத் கூறியுள்ளார். பின்னர் ஹோட்டல் ஊழியர்களிடம் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

   தற்கொலை தீர்வு அல்ல

  தற்கொலை தீர்வு அல்ல

  சைக்காலஜி படித்த பெண் இப்படி செய்யலாமா, யோசிக்க வேண்டாமா என ஆதங்க குரல்கள் வந்தாலும், தினமும் இறப்பதற்கு ஒரு முறை இறந்துவிடலாமே என்ற நொடிப்பொழுதில் எடுக்கும் அற்பமான எண்ணம் தான் சித்ராவின் இந்த தற்கொலை. மனதின் வடுக்களையும் காயங்களையும் ஒப்பனையால் மறைக்காமல் அனைத்தையும் கொட்டி தீர்த்துவிடுங்கள் தற்கொலை ஒருபோதும் தீர்வாகாது என பல ரசிகர்கள் தங்களது மன குமுறலை பகிர்ந்து வருகின்றனர்.

  English summary
  VJ Chitra fans feel suicide is not the solution for any problem.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X