twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹவுஸ்மேட்ஸ் அனைவர் மீதும் வழக்கு தொடர்ந்த கதிரவன்.. இதெல்லாம் ஒரு கேஸா என கேட்கும் தனலட்சுமி?

    |

    சென்னை: பிக் பாஸ் வீட்டில் யாருமே கோப்பைகளை சுத்தம் செய்வது இல்லை என்றும் காபி, டீ குடித்து விட்டு கண்ட இடத்தில் போடுகின்றனர் என ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸ் மீதும் புகார் கொடுக்க முடிவு செய்து விட்டார் கதிர்.

    வியாழக்கிழமையான இன்று ஏகப்பட்ட ஹவுஸ்மேட்கள் அடுக்கடுக்கான கேஸ்களை கொடுக்க ஆரம்பித்தனர்.

    நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பே தப்பு இருக்கு என தனலட்சுமி, விக்ரமன் உள்ளிட்டோர் கேஸ் கொடுக்க மைனா கொடுத்த கேஸ் செம காமெடியாக மாறியது.

    என்ன பத்தி பேச உனக்கு தகுதியே இல்லை..ராமை அசிங்கப்படுத்திய அசீம்.. சூடுபிடிக்கும் பிக் பாஸ் வீடு!என்ன பத்தி பேச உனக்கு தகுதியே இல்லை..ராமை அசிங்கப்படுத்திய அசீம்.. சூடுபிடிக்கும் பிக் பாஸ் வீடு!

    ஏகப்பட்ட கேஸ்

    ஏகப்பட்ட கேஸ்

    பிக் பாஸ் வீட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை நீதிமன்றத்தையே காமெடி தர்பார் ஆக்கி விட்டனர் போட்டியாளர்கள். என்ன கேஸ் வேண்டுமானாலும் கொடுக்கலாம் என நினைத்துக் கொண்டு போட்டியாளர்கள் கொடுத்த மொக்கை கேஸ்கள் எல்லாம் எளிதில் உடைக்கப்பட்டு முடிக்கப்பட்டன. சில கேஸ்களுக்கு நீதிபதிகள் கன்ஃப்யூஸ் ஆன தீர்ப்புகளை கொடுத்து சர்ச்சையில் சிக்கினர்.

    நீதிபதிகள் ஃபேவரிஸம்

    நீதிபதிகள் ஃபேவரிஸம்

    ரச்சிதா மீதான வழக்கில் ராபர்ட் மாஸ்டரை நீதிபதி ஆக்கிய இடத்திலேயெ தீர்ப்பு யாருக்கு சாதகம் ஆக வரும் என தெரிந்த நிலையில், அதே போலத்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. தனலட்சுமி, ராம் உள்ளிட்டவர்கள் நீதிபதி கோட் மாட்டிக் கொண்டு பண்ண காமெடிகள் எல்லாம் இந்த வாரம் களைகட்டின.

    கதிரின் மாஸ்டர் பிளான்

    கதிரின் மாஸ்டர் பிளான்

    ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்கள் மீதும் ஒரு பெரிய பக்காவான கேஸ் போட்டு அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார் கதிரவன். இந்த வீட்டில் டீ கோப்பைகளும், தட்டுகளும் சரியாக கழுவப்படுவதில்லை என்றும் சாப்பிடும் இடத்திலேயே அங்கேயே வைக்கப்படுகின்றன என்றும் புகார் அளித்து வழக்கு தொடர முடிவு செய்து விட்டார்.

    மைனா மீது போட முடியாது

    மைனா மீது போட முடியாது

    ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்கள் மீது எப்படி போடுவது, இதை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தலைவி மைனா நந்தினி உடையது தானே என நினைத்து அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்ய பிக் பாஸ் திடீரென வீட்டு கேப்டன் மீது வழக்கு தொடர முடியாது என சொல்லி விட்டார்.

    ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸ்

    ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸ்

    அப்போ இந்த வழக்கை ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸ் மீதே போடுகிறேன் என அனைவரையும் ஆட்டம் காண வைத்துள்ளார் விஜே கதிரவன். தனக்கு தீர்ப்பு கிடைக்க வேண்டியதை தாண்டி இந்த பிரச்சனையை கமல் சார் பார்த்து அனைவரையும் விளாசுவார் என்பதை தெளிவாக புரிந்து கொண்டே கதிர் இப்படியொரு வழககி தொடுத்துள்ளார்.

    தனலட்சுமி புலம்பல்

    தனலட்சுமி புலம்பல்

    அப்போ தினமும் கழுவி வைக்கிறது யாரு.. க்ளினிங் டீமே சரியில்லைன்னு சொல்ல வராரா? என்றும் இதெல்லாம் ஒரு கேஸா என தனலட்சுமி கதிர் கொடுத்த கேஸ் பற்றி புலம்பும் காட்சிகள் இன்றைய 3வது ப்ரோமோவில் வெளியாகி உள்ளன.

    புத்தி வரட்டும்

    புத்தி வரட்டும்

    கதிர் தொடுத்துள்ள வழக்கு ரொம்பவே நியாயமான ஒன்று. கதிர் சொல்ல சொல்ல பிக் பாஸ் வீட்டின் பல இடங்களில் அழுக்கு கிளாஸ் இருப்பதையும் கேமரா கண்கள் காட்டி உள்ளன. இந்நிலையில், இந்த வழக்குக்கு பிறகாவது அனைவருக்கும் புத்தி வரட்டும் என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

    English summary
    Vj Kathiravan gives case against whole housemates for not cleaning glasses and plates. Bigg Boss saved captain Myna Nandhini in that case so Kathir gives the case against whole housemates.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X