Don't Miss!
- News
யார் இந்த கே.எஸ்.தென்னரசு? அதிமுகவில் கடந்து வந்த பாதை என்ன? எடப்பாடி டிக் செய்தது எப்படி?
- Technology
84 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிக சலுகைகளை வழங்கும் Airtel இன் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அசீம் மாதிரி கேவலமா பேசுறதுக்கு இதுவே பெட்டர்... பப்ளிக்காக வெளுத்து வாங்கிய விஜே மகேஸ்வரி
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 12 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.
இவர்களில் விஜே மகேஸ்வரியும் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் செய்யப்பட்டவர்களில் ஒருவர்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் அசீம் விளையாடும் முறை குறித்து விஜே மகேஸ்வரி வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார்.
எங்கப்பா அந்த 3 பிக் பாஸ் பிரபலங்களே காணோம்.. ’துணிவு’ அறிவிப்பில் மிஸ்ஸான அமீர், பாவனி, சிபி!

இறுதிக்கட்டத்தில் பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இதுவரை 82 நாட்களை கடந்துவிட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், தற்போது 9 பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். ஜிபி முத்து, அசல் கோளாறு, விஜே மகேஸ்வரி, ஷெரினா, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ராம், குயின்ஸி, ஜனனி, தனலட்சுமி ஆகியோர் வெளியேறிவிட்டனர். இந்நிலையில், இந்த வாரம் மணிகண்டன் எவிக்சன் செய்யப்படலாம் என தகவல் கிடைத்துள்ளது.

அசீமின் அட்ராசிட்டி
இந்த சீசனில் இதுவரை அதிகம் விமர்சனங்களை சந்தித்த போட்டியாளர் என்றால் அது அசீமாக தான் இருக்கும். ஆரம்பம் முதலே பிக் பாஸ் வீட்டில் எந்த போட்டியாளரையும் மதிக்காமல், கொஞ்சம் கூட மனிதத்தன்மையற்ற முறையில் விளையாடி வருகிறார். முதலில் ஆய்ஷாவிடம் பிரச்சினையை தொடங்கிய அசீம், அடுத்தடுத்த நாட்களில் விஜே மகேஸ்வரி, விக்ரமன், தனலட்சுமி, ஏடிகே, அமுதவாணன், மைனா நந்தினி, ஜனனி என யாரையும் விட்டுவைக்கவில்லை. அசீமின் டார்க்கெட்டில் இருந்து அதிகம் தப்பியவர்கள் என்றால் அது மணிகண்டனும் கதிரும் தான். இதில் மணிகண்டன் அசீம்க்கு ஜால்ரா அடித்தே அவரிடம் இருந்து தப்பிப் பிழைத்தார்.

விஜே மகேஸ்வரி விமர்சனம்
பிக் பாஸ் வீட்டில் அதிகம் பிரச்சினைகளை எழுப்பியதும், சக போட்டியாளர்களை டிரிக்கர் செய்ததும் அசீம் தான். கோபமாக பேசுவதும், தரம் குறைந்த வார்த்தைகளை பயன்படுத்துவதும் என அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் வார இறுதியில் கமல் முன்னிலையில் பலமுறை பஞ்சாயத்துக்கு வந்துள்ளார் அசீம். ராஜா ராணி டாஸ்க்கில் விக்ரமனிடம் "சாப்பாட்டுத் தட்டில் காறி துப்பினால் சாப்பிடுவாயா?" என கேட்டபோதே, அவர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல், கடந்த வாரம் நடந்த டாஸ்க்கிலும் அசீம் வரம்பு மீறி பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில், அசீமின் இந்த அணுகுமுறை குறித்து, ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் ஆன விஜே மகேஸ்வரி விமர்சித்துள்ளார்.

கேவலமான விளையாட்டு
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், பிக் பாஸ் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அசீம் மாதிரி மத்தவங்களை கேவலமா பேசினா தான் சர்வைவ் பண்ண முடியும் என்றாலோ, தொடர்ந்து விளையாட முடியும் என்றாலோ, அதற்கு நான் வெளிய வந்ததே பெட்டர் எனக் கூறியுள்ளார். இவ்வளவு மோசமான மனநிலையில் விளையாடும் அசீமை எப்படி தான் சிலர் கண்மூடித்தனமா சப்போர்ட் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை என வெளிப்படையாக கூறியுள்ளார். சுயதம்பட்டம் அடித்துக் கொண்டு மற்றவர்களை கேவலமாக பேசி அதன் மூலம் ஆதாயம் தேடும் அசீம்க்கு பிக் பாஸ் டைட்டில் கொடுக்கக் கூடாது என நெட்டிசன்களும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.