கோமாளிகளால் நம்மை ஜெயிக்க முடியாது... பிக் பாஸ் அசீமை நேரடியாக அட்டாக் செய்த மகேஸ்வரி

சென்னை: 2022 அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 கடந்த மாதம் 22ம் தேதியோடு முடிவுக்கு வந்தது.

21 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சீசனில் அசீம் - விக்ரமன் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இறுதியாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார்.

பிக் பாஸ் சீசன் 6 முடிந்த பிறகும் கூட போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்து வருகிறது.

டைட்டில் வின்னர் அசீம்

டைட்டில் வின்னர் அசீம்

பிக் பாஸ் சீசன் 6 கடந்தாண்டு அக்டோபரில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இந்த சீசனில் ஜிபி முத்து, அசல் கோளாறு, மகேஸ்வரி, ஷெரினா, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ராம், குயின்ஸி, ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரச்சிதா, ஏடிகே, அமுதவாணன், மைனா நந்தினி, ஷிவின், விக்ரமன், அசீம் ஆகியோர் கலந்துகொண்டனர். ஷிவின், விக்ரமன், அசீம் மூவரும் இறுதிப் போட்டிக்கான மேடையில் ஏறிய நிலையில், அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

மகேஸ்வரி ஒரு பாம்பு

மகேஸ்வரி ஒரு பாம்பு

வாக்குகளின் அடிப்படையில் அசீம் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனாலும் அவர் டைட்டில் வென்றதை ரசிகர்களும் மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ச்சியாக அபியூசர் அசீம் எனவும், அறம் வெல்லும், டோட்டல் வின்னர் விக்ரமன் என்ற ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டிங்கில் வந்தன. இதனிடையே பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்த அசீமிடம் பிக் பாஸ் வீட்டில் யார் பாம்பு என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அசீம், விஜே மகேஸ்வரி தான் பாம்பு, அவர் எப்போதும் பிரச்சினையை உருவாக்கி சீறிக்கொண்டே இருப்பார் எனக் கூறியிருந்தார்.

பதிலடி கொடுத்த மகேஸ்வரி

பதிலடி கொடுத்த மகேஸ்வரி

அசீமின் இந்த பதில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. இதனையடுத்து இதற்கு மகேஸ்வரியும் பதிலடி கொடுத்துள்ளார். அதில், "யாரோ என்னை பாம்பு என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளனர். இதுபோன்ற பல கோமாளிகள் சொல்வார்கள். நம்மை பாம்பு என்று சிலர் அழைக்கலாம், ஆனால் அந்த கோமாளிகளால் நம்மை ஜெயிக்க முடியாது" என கூறியுள்ளார். அசீமை நேரடியாக குறிப்பிடாமல் அவரை கோமாளி என மகேஸ்வரி விமர்சித்துள்ளது வைரலாகி வருகிறது. ஏற்கனவே அசீம் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது கோமாளி அசீம் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுக்கு முடிவே கிடையாதா?

இதுக்கு முடிவே கிடையாதா?

முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சனாகி வெளியே வந்த பின்னர் பேட்டிக் கொடுத்திருந்த மகேஸ்வரி, அசீம் மாதிரி மத்தவங்களை கேவலமா பேசினா தான் சர்வைவ் பண்ண முடியும் என்றாலோ, தொடர்ந்து விளையாட முடியும் என்றாலோ, அதற்கு நான் வெளிய வந்ததே பெட்டர் எனக் கூறியிருந்தார். மேலும், இவ்வளவு மோசமான மனநிலையில் விளையாடும் அசீமை எப்படி தான் கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், சீசன் முடிந்த பின்னரும் அதில் பங்கேற்றவர்கள் மாறி மாறி கருத்து கூறி வருவது ரசிகர்களிடம் விவாதமாகியுள்ளது. இறுதிப் போட்டிக்கு முன்னர் ஏற்கனவே எவிக்சனான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தனர். அப்போது வெளியே சென்றதும் அசீமுடன் நட்பாக பழக வேண்டும் என மகேஸ்வரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X