Bigg Boss Tamil 6: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் விஜே மகேஸ்வரி.. நோ அழுகாச்சி டிராமா!

சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து விஜே மகேஸ்வரி அதிகாரப்பூர்வமாக வெளியேறி உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் தனலட்சுமி, மகேஸ்வரி, ராம் மூவரும் கடைசி இடத்தில் இருந்த நிலையில், யார் காப்பாற்றப்படுவார் என கமல் கேட்க, எப்படியாவது வெளியே போய்விட வேண்டும் என இந்த வாரம் ஆயிஷா மனநிலையில், இருந்த தனலட்சுமி ராம் மற்றும் மகேஸ்வரி சேவ் செய்யப்படுவர் எனக் கூறினார்.

ஆனால், எப்போதும் போலவே ரச்சிதா இந்த முறையும் சரியாக மகேஸ்வரி தான் வெளியேறுவார் என்பதை சரியாக சொன்னார்.

சூடு படுத்தும் கமல்

சூடு படுத்தும் கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஷூட்டிங் சனிக்கிழமை முடிந்தவுடனே யார் வெளியேறுகிறார் என்பது கசிந்து விடுகிற நிலையில், ஞாயிற்றுக்கிழமை எவிக்‌ஷன் அவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பதில்லை. ஆனால், அதற்கு பதிலாக சில சவுக்கடிகளை கமல் கொடுத்து நிகழ்ச்சியை சூடு படுத்தி வருகிறார். இந்த வாரம் தனலட்சுமிக்கு அவர் கொடுத்த நோஸ் கட் ரசிகர்களை மிரள வைத்தது.

மகேஸ்வரி வெளியேறினார்

மகேஸ்வரி வெளியேறினார்

ரச்சிதாவின் கணிப்பு இந்த வாரமும் தவறாக போகவில்லை. அவர் சொன்ன மாதிரியே மகேஸ்வரி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால், எந்தவொரு டிராமாவையும் போடாமல் சிரித்துக் கொண்டே எல்லாருக்கும் பை பை சொல்லிவிட்டு மகேஸ்வரி சென்ற காட்சிகள் ரொம்பவே ரசிக்கும் படி இருந்தன.

ஹாலிடே பிளான்

ஹாலிடே பிளான்

கமல்ஹாசனிடம் மேடை ஏறி பேசிய மகேஸ்வரி ஹவுஸ்மேட்ஸை பார்க்க வேண்டும் என கோரிக்கை வைக்க அவர்களை பார்த்து கடைசியாக ஒரு முறை பை சொல்லிவிட்டு புறப்பட்டார். வரும் போதே என் பையன் அம்மா உள்ளே போனா டைட்டில் வின் பண்ணிட்டு வா.. இல்லைன்னா ஹாலிடே முடியறதுக்குள்ள வான்னு சொன்னான்.. இப்போ வெளியே போய் அவன் கூட ஹாலிடே கொண்டாடப்போறேன் எனக் கூறிவிட்டு கிளம்பினார் மகேஸ்வரி.

ஃபீல் பண்ண ஷிவின்

ஃபீல் பண்ண ஷிவின்

இந்த எபிசோடில் மகேஸ்வரிக்கு சிகப்பு ஸ்டாம்ப் குத்திய ஷிவின் மகேஸ்வரி எவிக்டட் என கமல் அறிவித்ததும் ரொம்பவே ஃபீல் பண்ணார். அவரை போலவே ஏடிகேவும் மகேஸ்வரி எவிக்‌ஷனால் மனம் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர். வார வாரம் வெளியே போறவங்க சிரிக்கிறதும், வீட்டுல இருக்கிறவங்க கொஞ்சம் நேரம் அழறதும் சகஜம் தானே பாஸ்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X