Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விமர்சனம் செய்ய நீ யாரு?..உருவ கேலி செய்தவருக்கு விஜே பார்வதி கோபமான பதிலடி!
சென்னை : இணையத்தில் தரக்குறைவாக உருவகேலி செய்த இணையவாசிக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் விஜே பார்வதி
ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி பார்வதி தற்போது வீடியோ ஜாக்கியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர், தற்போது சென்னையில் செட்டிலாகி விட்டார். இவருடையே ஸ்பெஷலே அழகான தமிழ் உச்சரிப்பு தான்.
குண்டாக இருந்ததால் உருவகேலி செய்தார்கள்.. குஷ்புவின் மகள் வேதனை !

விஜே பார்வதி
ஜர்னலிசம் படித்துள்ள விஜே பார்வதி, ஆரம்பத்தில் செய்தியாளராக பணியாற்றி உள்ளார். ஆர்ஜேவாக இருந்த பார்வதி மடக்கி மடக்கி கேள்வி கேட்கும் திறமைகொண்டவர். இவரின் அதிரடியான பேச்சை பார்த்து இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உருவானது. ரேடியோ ஜாக்கியாக இருந்த இவர்,கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் குக் வித் கோமாளி 2 உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

சர்வைவர் நிகழ்ச்சியில்
யூடியூப் தளங்களில் பல்வேறு விதமான சர்ச்சைக்குள்ளான தலைப்புகளில் பேசி ரசிகர்களை தன்பக்கம் திருப்பினார். அண்மையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அர்ஜுன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் ஆண்களுக்கு மத்தியில் கடுமையான டாஸ்கை அசால்டாக செய்து முடித்து, ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார்.

இணையத்தில் ஆக்டிவாக
சர்வைவர் நிகழ்ச்சிக்கு பிறகு இணையத்தில் ஆட்டிவாக இருக்கும் விஜே பார்வதி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அதிரிபுதிரியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது, இன்ஸ்டாகிராமில் நேரலையிலும் பேசி வருகிறார். இதனால், இணையத்தில் ஏராளமான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

மோசமான கமெண்ட்
இந்நிலையில், விஜே பார்வதி வீட்டில் வொர்க் அவுட் செய்யும் போட்டோவை போட்டிருந்தார். இந்த போட்டோவில் அவர் ஜிம்மில் பயன்படுத்தும் உடையை அணிந்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், கொடுமைடா சாமி, நல்லா பிட்டா இருந்து போட்டோ போட்டா ஓகே, ஆனா இப்படி கர்ப்பமான பன்னி மாதிரி இருந்துட்டு முடியல என மோசமாக கமெண்ட் செய்திருந்தார்.

கோபமான பதிலடி
இந்த கமெண்டை பார்த்து கடுப்பான பார்வதி, என் தொப்பையை பற்றி கமெண்ட் வரும் என்று எனக்கு தெரியும். பெண்கள் எப்போதும் அழகான உடல் ஷேப்புடன் தான் இருக்க வேண்டுமா? அழகின் தரத்தை தீர்மானிப்பதற்கு நீ யார்? இப்படி கமெண்ட் செய்யும் நீங்கள் ஃபிட்டாக இருக்கீங்களா? என்று கேள்வி எழுப்பியுள்ள பார்வதி, நான் தொடர்ந்து இந்த தொப்பையுடன் பதிவுகளை போடுவேன்.

என் இஷ்டம்
என்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதும், வைத்திருக்காததும் என்னுடைய இஷ்டம் தொப்பையுடன் இருப்பதும், அதோடு புகைப்படத்தை பதிவிடுவதும் என்னுடைய இஷ்டம். நீ சந்தோஷமாக இருப்பதற்காக எல்லாம் என்னால அழகான போட்டோவை பதிவு செய்ய முடியாது. இது என்னுடைய உடம்பு என்னுடைய அக்கவுண்ட், என்னுடைய இஷ்டம் என குறிப்பிட்டுள்ளார்.