இரண்டாவது திருமணம்.. ஏங்க என்கிட்ட இருக்காதா?.. விமர்சனங்களுக்கு விஜே பிரியங்கா பதிலடி

சென்னை: விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் விஜே பிரியங்கா. அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் தனது டைமிங் மற்றும் குறும்புத்தனமான செயல்களால் சுவாரஸ்யமாக கொண்டு செல்லக்கூடியவர். அவர் சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். வசி என்பவரை அவர் மணமுடித்திருக்கிறார். இந்நிலையில் தனக்கு நடந்த திருமணத்தை விமர்சித்தவர்களுக்கு தகுந்த பதிலடியை கொடுத்திருக்கிறார் அவர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் விஜே பிரியங்கா. டைமிங் காமெடிகளால் தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை மிக சிறப்பாக நகர்த்தி செல்லக்கூடிய வல்லமை கொண்ட அவருக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். முக்கியமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இந்த சீசனில் அவரது தொகுத்து வழங்கும் முறை அனைவரையுமே கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் பிரியங்கா: இதற்கிடையே தொகுப்பாளர் பயணம் மட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். எப்படியும் டைட்டில் வென்றுவிடுவார் என்றுதான் விஜேவின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் பாதியிலேயே வெளியேறிவிட்டார். இருப்பினும் அந்த நிகழ்ச்சியில் தனது இயல்புத்தன்மையோடு விளையாண்டதை பலரும் கொண்டாடினார்கள்.

VJ Priyanka Opens Up About Second Marriage My Husband Is Not From a Rich Family Strong Reply to Trolls
Photo Credit:

சர்ச்சையை சந்தித்த பிரியங்கா: பெரும்பாலும் சர்ச்சைகள் எதிலும் சிக்காமல் இருக்கும் பிரியங்கா அண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதனை மணிமேகலை தொகுத்து வழங்கினார். அப்போது இரண்டு பேருக்கும் முட்டிக்கொண்டது. இந்த விவகாரத்தால் சேனலிலிருந்தே மணிமேகலை வெளியேறினார். அதுமட்டுமின்றி பிரியங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

இரண்டாவது திருமணம்: அதேபோல் முதலில் திருமணம் செய்து விவாகரத்து ஆன பிரியங்கா அடுத்ததாக வசி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேருக்குமிடையே வயது வித்தியாசம் அதிகம். அதனை வைத்து பிரியங்கா பற்றி இஷ்டத்துக்கு ஒருதரப்பினர் பேசினார்கள். இதுகுறித்து இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த அவர் தற்போது தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்திருக்கிறார்.

பிரியங்கா பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "எனது திருமணத்தின்போது சில யூடியூப்களில் பிரியங்கா கணவர் சாதாரண ஆள் கிடையாது. தீவு வாங்கி கொடுத்திருக்கிறார். 200 கோடி ரூபாய் சொத்து இருக்கு. அரசியல் குடும்பம் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் அதில் எதுவுமே உண்மை இல்லை. எனது கணவர் வசி இலங்கை தமிழர். அவர் குடும்பத்தினர் லண்டனில் வசிக்கிறார்கள். அங்கே ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறார் அவ்வளவுதன். பணத்துக்காக நான் திருமணம் செய்துகொண்டேன் என்று பரப்பியிருக்கிறார்கள். நான் இத்தனை வருடங்கள் உழைக்கிறேன். என்னிடம் பணம் இருக்காதா" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X