»   »  விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யாவின் இன்னொரு முகம்

விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யாவின் இன்னொரு முகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பவர்லிப்டிங் அசோசியேசன் நடத்திய போட்டியில் பங்கேற்று அவரது எடை பிரிவில் பளு தூக்கி சேம்பியன் பட்டத்தை வென்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா. இந்த தகவலை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் ரம்யா.

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக உள்ள ரம்யா, எஃப் எம் ரேடியோவில் ஆர்ஜேவாகவும் இருக்கிறார். மணி ரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தில் நடித்த ரம்யா, மாடலிங்கும் செய்து வருகிறார்.

VJ Ramya gets into power lifting

நடன போட்டிகளில் பங்கேற்று நடனமாடி வரும் ரம்யா ஒரு பளு தூக்கும் வீராங்கனையும் ஆவார். சமீபத்தில் சென்னையில் பவர்லிப்டிங் அசோசியேசன் நடத்திய போட்டியில் அவரது எடை பிரிவில் பங்கேற்று முதலிடம் பெற்றார்.

இதற்காக சாம்பியன் பட்டத்தையும், தங்க மெடலையும் பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோவையும், பதக்கத்தையும் ரம்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

English summary
VJ Ramya posted on her micro-blogging page, "Going for the gold with 75lbs benchpress in the district level powerlifting championship! My final lift was a big moment.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil