For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இன்று கூட தூங்கி எழுந்தவுடன் அவர் நினைவுதான் வந்தது.. வடிவேல் பாலாஜி குறித்து கண்கலங்கிய விஜே ரம்யா!

  |

  சென்னை: இன்று கூட தூங்கி எழுந்ததும் வடிவேல் பாலாஜி நினைவுதான் வந்தது என்று உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகையும் விஜேவுமான ரம்யா.

  பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி கடந்த வியாழக்கிழமை காலமானார். 42 வயதில் நடிகர் வடிவேல் பாலாஜி உடல் நலக்குறைவால் மரணமடைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  நடிகர் வடிவேல் பாலாஜிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரது கை கால்கள் செயலிழந்தன.

   பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்.. சூப்பர்ஸ்டார் முதல் தனுஷ் வரை.. ஏகப்பட்ட பிரபலங்கள் வாழ்த்து! பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்.. சூப்பர்ஸ்டார் முதல் தனுஷ் வரை.. ஏகப்பட்ட பிரபலங்கள் வாழ்த்து!

  உயிரிழப்பு

  உயிரிழப்பு

  தொடர்ச்சியாக மூளையில் ரத்தக்கசிவு, சிறு நீரகம் செயலிழப்பு என அடுத்தடுத்து பின்னடைவுகள் ஏற்பட தனியார் மருத்துவமனை அரசு மருத்துவமனை என 5 மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு கடைசில் சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  சிவகார்த்திகேயன்

  சிவகார்த்திகேயன்

  அவரது மறைவு ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினர் இடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறைந்த வடிவேல் பாலாஜிக்கு மனைவி மற்றும் பள்ளி செல்லும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாக கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

  நம்ப முடியாமல்

  நம்ப முடியாமல்

  வடிவேல் பாலாஜி மரணமடைந்து இன்றோடு ஒரு வாரமாகிவிட்டது. ஆனாலும் அவருக்கு நெருக்கமானவர்களும் அவருடன் பழகியவர்களும் அவர் உயிருடன் இல்லை என்பதை நம்ப முடியாமல் அதனை ஏற்று வருகின்றனர்.

  விஜே ரம்யா உருக்கம்

  விஜே ரம்யா உருக்கம்

  இந்நிலையில் வடிவேல் பாலாஜி விஜய் டிவியில் பங்கேற்ற கலக்கப்போவது யாரு முதல் எபிசோடில் விஜேவாக இருந்த ரம்யா, அவர் குறித்த நினைவுகளை உருக்கமாக பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

  பெரிய அதிர்ச்சி

  பெரிய அதிர்ச்சி

  அதில் அவர் பேசியிருப்பதாவது, வடிவேல் பாலாஜி அண்ணன் இறந்து ஒரு வாரம் ஆயிடுச்சு.. பலருக்கும் அவர ஒரு என்டேர்டெயினரா தெரியும். என்னை மாதிரி சிலருக்கு அவரு ரொம்பவே நெருக்கமானவரா தெரியும். அவருடைய மரணம் ஒட்டு மொத்த தமிழ் நாட்டுக்கும் பெரிய அதிர்ச்சியா இருந்தது.

  எந்திரிக்கும் போதே

  எந்திரிக்கும் போதே

  எல்லாருமே ரொம்ப டிஸ்டர்பா இருந்திருப்போம். இன்னமும் அவருடைய நினைவா இருக்காங்கன்னு தெரியல.. ஆனா இன்னைக்கு நான் எந்திருக்கும் போது அவருடைய நினைவோடதான் எந்திரிச்சேன். அவர பத்தி எனக்கு தெரிஞ்ச விஷயங்கள பேச நினைக்கிறேன்.

   ஓரமா உட்கார்ந்து

  ஓரமா உட்கார்ந்து

  வடிவேல் பாலாஜி அண்ணா கலக்கப்போவது யாரு முதல் ஷோ வந்தப்போ அந்த ஷோவுக்கு நான்தான் ஆங்கர். அப்போ நடந்தத என்னால மறக்கவே முடியாது. ஷுட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி எல்லாரும் உள்ளே வர்றாங்க. நான் ஓரமா உட்கார்ந்து பார்த்துட்டு இருக்கேன்.

  வடிவேலு சார் என்று நினைத்து

  வடிவேலு சார் என்று நினைத்து

  அப்போ, வடிவேலு சார் துபாய் காமெடியில் போட்டிருக்கும் நீல நிற ஷைனிங் டிரெஸை போட்டுக்கொண்டு உள்ளே வந்தார். உண்மையில் வடிவேலு சார்தான் நிகழ்ச்சிக்கு கெஸ்ட்டாக வருகிறார் போல என்று நினைத்து, அவரை பார்த்து எக்ஸைட்மென்டில் எழுந்து நின்றேன்.

  கலாய்த்ததில்லை

  கலாய்த்ததில்லை

  அதை பார்த்து உட்காருங்கம்மா என்று கூறி அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டார். ஆன் தி ஸ்பாட்டில் கன்டென்ட் எடுப்பார். நான் போட்டிருக்கும் டிரெஸை பத்தியோ என் மேக்கப்பை பத்தியோ, என் கலரை பத்தியோ பேசி ஒரு நாளும் என்னை கலாய்த்ததில்லை.

  தன்னை தானே ஹர்ட் பண்ணி

  தன்னை தானே ஹர்ட் பண்ணி

  வெளியூர் வெளிநாடு என்று செல்லும்போதெல்லாம் பிளைட்டில் லூட்டி அடிப்பார். ரொம்பவே என்டெர்டெயினிங்காக இருக்கும். யாரையும் ஹர்ட் பண்ணாமல் தன்னை மட்டுமே ஹர்ட் பண்ணி மற்றவரை சிரிக்க வைப்பார் வடிவேல் பாலாஜி.

  வி மிஸ் யூ

  வி மிஸ் யூ

  அவரை பற்றி பேசும் போது சந்தோஷமாக இருக்கிறது. அவர் இல்லை என்பதை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது. வி மிஸ் யூ.. என கண்கள் கலங்க உருக்கமாக பேசியுள்ளார் விஜே ரம்யா. அவரது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், வடிவேல் பாலாஜியை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளனர்.

  English summary
  VJ Ramya has shared a video about Vadivel balaji. She shares her experience with him.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X