Don't Miss!
- News
இருளில் மூழ்கிய ஜேஎன்யு! பிரதமர் மோடி பிபிசி ஆவணப்படம் திரையிடுவதை தடுக்க மின்சாரம் துண்டிப்பு!
- Finance
அமெரிக்காவுக்குப் போட்டியாக இந்திய நிறுவனங்கள்.. ஊழியர்கள் தான் பாவம்..!
- Automobiles
ரொம்ப பழசு போல தெரிஞ்சாலும் உடனே புதுசுபோல மாத்திடலாம்... வெது வெதுவெனு தண்ணி, சோப்பு கரைசலே போதும்!
- Sports
நியூசியை ஓயிட்வாஷ் செய்த இந்தியா.. 3வது ஒருநாள் போட்டியில் அபாரம்.. ஐசிசி நம்பர் 1 அணியானது இந்தியா
- Lifestyle
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.. விஜே ரம்யா பரபரப்பு!
சென்னை : விஜேவாக ரசிகர்களை கவர்ந்தவர் ரம்யா. இவர் தற்போது படங்களில் முக்கியமான கேரக்டர்களில் தோன்றி அசத்தி வருகிறார்.
சங்கத்தமிழன், கேம் ஓவர், ஆடை என அடுத்தடுத்தப் படங்களில் இவர் நடித்துள்ளார்.
அடுத்தடுத்து படங்களின் இசை வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் இவரை காண முடிகிறது.
இனிமேல் என்னை கன்ட்ரோல் பண்ணவே முடியாது..தாறுமாறாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!

பிரபல விஜே ரம்யா
பிரபல விஜேவாக இருந்து பல பிரபலங்களை பேட்டி கண்டும் முக்கியமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் ரசிகர்களை கவர்ந்தவர் ரம்யா. இவர் முன்னணி படங்களின் இசை வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளையும் தனியாக தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது படங்களிலும் இவர் முக்கியமான கேரக்டர்களில் இவரை காண முடிகிறது.

படங்களில் கவனம்
சங்கத் தமிழன் படத்தில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய விஜே ரம்யா, தொடர்ந்து டாப்சியுடன் கேம் ஓவர், அமலா பாலுடன் ஆடை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தனியாக யூடியூப் சேனலை நடத்தி பிட்னஸ் குறிப்புகளையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். மேலும் எழுத்தாளராகவும் மாறி, Stop Weighting என்ற நூலையும் எழுதியுள்ளார்.

ரம்யாவின் சமீபத்திய பேட்டி
யூடியூப் சேனலுக்கு ரம்யா அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, கேரியர் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார். தன்னுடைய பதின் பருவத்தில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு திரைப்பட சூட்டிங்கிற்கு தான் செல்லும்போது, அசதியில் தன்னுடைய கண்கள் சிவந்து காணப்படும் என்றும் அதை ஒரு கேமராமேன், பப்பிற்கு சென்று சரக்கு அடித்தாயா என்று கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அழவைத்த கேமரா மேன்
இதையடுத்து அவருக்கு பதிலடி கொடுக்க தெரியாமல், தனியாக சென்று தான் அழுததாகவும், தற்போது அதை நினைக்கும்போது, அவருக்கு பதிலடி கொடுக்காததை நினைத்து வருத்தப்படுவதாகவும் ரம்யா தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் என்பது அனைவருக்கும் முக்கியமானதுதான் என்றும் ஆனால் அதுவே வாழ்க்கையின் துவக்கமும் முடிவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

குழந்தை பெறுவது குறித்த ரம்யா பேட்டி
திருமணம் செய்துக் கொள்வதையும் குழந்தை பெற்றுக் கொள்வதையும் மற்றவர் விருப்பத்திற்காக நாம் செய்யக் கூடாது என்றும் திருமணம் நம்முடைய விருப்பப்படிதான் அமைய வேண்டும் என்றும் ரம்யா மேலும் கூறியுள்ளார். மேலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா அல்லது வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என்பதையும் நாம்தான் தீர்மானம் செய்ய வேண்டும் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

விவாகரத்து குறித்து மனம்திறந்த ரம்யா
கடந்த 2004ல் மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்ற ரம்யா, தொடர்ந்து விஜய் டிவியின் பல முன்னணி ஷோக்களை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அவரது திருமண வாழ்க்கை நினைத்தபடி அமையவில்லை. கணவரை விவாகரத்து செய்த ரம்யா, மீண்டும் தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய வாழ்க்கை இருள் சூழ்ந்து இருந்ததாக அவர் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.