VJS 46...டைட்டிலே வைக்காமல் மொத்த ஷுட்டிங்கையும் முடிச்சுட்டாங்களேப்பா

சென்னை : விஜய் சேதுபதியின் 46 வது படத்திற்கு இதுவரை டைட்டில் வெளியிடவே இல்லை. ஆனால் அதற்குள் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கையும் முடித்து விட்டார்கள்.

விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கு VJS 46 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. டைரக்டர் பொன்ராம் இயக்கி உள்ள இந்த படம் சன் பிக்சர்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷுட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.

மீண்டும் போலீசாகும் விஜய் சேதுபதி

மீண்டும் போலீசாகும் விஜய் சேதுபதி

கிராமத்து பொழுதுபோக்கு படமாக எடுக்கப்பட்டுள்ள விஜேஎஸ் 46 படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் சேதுபதி போலீஸ் ரோலில் நடித்துள்ளார். சேதுபதி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் ஹீரோயினாக 2018 ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் நடித்துள்ளார்.

இவரும் இருக்கிறார்

இவரும் இருக்கிறார்

2021 ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த படம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல் கட்ட ஷுட்டிங் திண்டுக்கல்லில் துவங்கப்பட்டது. தற்போது இறுதிக்கட்ட ஷுட்டிங் செங்கல்பட்டில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பெண் போலீஸ் ரோலில் பிக்பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் இணைந்துள்ளதாக பொன்ராம் கடந்த மாதம் அறிவித்தார்.

டைட்டில் கூட வைக்கலியே

டைட்டில் கூட வைக்கலியே

இது கிராமத்து கதை, மாவட்டத்தில் உள்ள போலீசாரை பற்றிய படம் என பொன்ராம் தனது பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். ஆனால் இந்த படத்தின் டைட்டில், டீசர், ஃபஸ்ட் லுக் என எது பற்றியும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் சத்தமே இல்லாமல் ஷுட்டிங் மொத்தத்தையும் முடித்து விட்டார்கள்.

எதற்காக இந்த சஸ்பென்ஸ்

எதற்காக இந்த சஸ்பென்ஸ்

இதனால் இப்படி மொத்தமும் சஸ்பென்சாக, பரம ரகசியமாக வைக்கும் அளவிற்கு அப்படி என்ன படம்...என்ன டைட்டில் வைக்க போகிறார்கள் என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர். பொதுவாக விஜய் சேதுபதி படம் என்றால் விளம்பரங்களை செமயாக வெளியிடுவார்கள். அடிக்கடி அப்டேட் வரும். ஆனால் இந்த படம் பற்றிய தகவல்கள் மிக குறைவாகவே வெளியிடப்பட்டுள்ளதே...இதற்கு என்ன காரணமாக இருக்கும் என பலரும் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X