»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் வி.கே.ராமசாமியின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் படுத்தபடுக்கையாக உள்ளார்.

இதையடுத்து அவரை அரசு மருத்துவனையில் சேருமாறு சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை கேட்டுக்கொண்டுள்ளார். அவருக்கு அனைத்து சிகிச்சைகளையும் செய்து தர ஏற்பாடு செய்வதாகவும் அவர்உறுதியளித்துள்ளார்.

பல நடிகர்களும் வி.கே.ராமசாமிக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.

வி.கே.ராமசாமிக்கு சமீபத்தில் தொடைப் பகுதியில் ரத்தக் கட்டி ஏற்பட்டது. இதையடுத்து தேவகிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ரத்தக் கட்டி கறைவதாகஇல்லை. மேலும் அவரது உடலும் பலவீனமாகிக் கொண்டே வருகிறது.

இந் நிலையில் வி.கே.ராமசாமியின் நலை குறித்த அறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை, உடனடியாகஅவரை அரசு பொது மருத்துவமனையில் சேருமாறும், அங்கு நவீன சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாகவும்கூறியுள்ளார். இதையடுத்து வி.கே.ராமசாமியை அரசு மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே வி.கே.ராமசாமியை பார்த்து நலம் விசாரித்த நடிகர் வடிவேலு, அவரது சிகிச்சை செலவுக்காக ரூ.25,000 வழங்கினார்.

இதுபோல, நடிகர் சங்கம் சார்பிலும் கணிசமான தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் பெரும் பணம் ஈட்டிய வி.கே. ராமசாமி ரேஸ் மற்றும் குடிப் பழக்கத்தால் தனது பணத்தை இழந்தார்.வறுமையில் இருந்த அவருக்கு ரஜினி உதவினார்.

தனது சொந்தப் படத்தில் வி.கே.ராமசாமியையும் ஒரு பார்ட்னராகப் போட்டு அதில் லாபத்தில் ஒரு பங்கைத் தந்துஉதவினார். இப்போது வடிவேலு உள்ளிட்ட பிற நடிகர்களும் உதவ முன் வந்துள்ளனர்.

அதைவிட, அரசின் சார்பில் நலத்துறை அமைச்சரே உரிய சிகிச்சை அளிக்க முன் வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil