#VTK உடனடி அப்டேட்..அடுத்து ராம் பொத்தினேனியுடன் இணைகிறார் இயக்குநர் கெளதம் மேனன்
வெந்து தணிந்தது காடு படத்தை அடுத்து ராம் பொத்தனேனியுடன் இணைந்து படம் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கவுதம் வாசுதேவ மேனன் நீண்ட காலத்திற்கு பின் இயக்கிய படம் வெந்து தணிந்தது காடு இன்று வெளியாகியுள்ளது.
வெந்து தணிந்தது காடு முடிந்து வெளியான உடனே தனது அடுத்தப்பட இயக்கம் பற்றிய அப்டேட்டை உடனடியாக அறிவித்துள்ளார்.

பான் ஸ்டார் ராம் பொத்தனேனியுடன் கைகோர்க்கும் கவுதம் மேனன்
வித்தியாசமான கதைக்களத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடிய நடிகர் ராம் பொத்தினேனி அடுத்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் இணைகிறார். தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், ராம் பொத்தினேனியுடன் புதிய படம் ஒன்றிற்காக அடுத்த வருடம் இணைய இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.

முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்பட்ட கேங்க்ஸ்டர் படம் வெந்து தணிந்தது காடு
கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் என்றாலே பொதுவாக ஸ்டைலிஷ், மாடர்ன் த்ரில்லர் கதைகளே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தீவிரமான ஆக்ஷன் கதைக்களத்தை சிம்புவுடன் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் கொடுத்து இருக்கிறார். சமீபமாக, ராம் பொத்தினேனியும் வழக்கமான மாஸ் ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிப்பதில் இருந்து விலகி வருகிறார். இந்த நிலையில், கெளதம் மேனன் - ராம் பொத்தினேனி கூட்டணியில் கதைக்களம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.

கவுதம் மேனனின் அடுத்த அப்டேட் உடனடியாக வெளியானது
வித்தியாசமான, ஆர்வமூட்டும் கதைக்களமாகராம் பொத்தனேனியின் புதிய படம் இருக்கும் என்பதையும் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் ஸ்ரவந்தி ரவி கிஷோர் தனக்கும் ராம் பொத்தினேனிக்கும் ஒரு பொது நண்பராக நீண்ட காலமாக இருந்து வருவதையும் கெளதம் மேனன் குறிப்பிட்டுள்ளார். தீவிரமான கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட 'வெந்து தணிந்தது காடு' (தெலுங்கில் 'தி லைஃப் ஆஃப் முத்து) தெலுங்கில் ஸ்ரவந்தி மூவிஸ்ஸின் ஸ்ரவந்தி ரவி கிஷோரால் வெளியிடப்படுகிறது.

வாரியர் சரியாக போகாத நிலையில் கவுதம் மேனன் கூட்டணிக்கு எதிர்பார்ப்பு
கடந்த ஜூலை மாதம் ராம் பொத்தனேனி நடிப்பில் பெருத்த எதிர்ப்பார்ப்புடன் வந்த வாரியர் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இந்நிலையில் அவர் கவுதம் வாசுதேவ மேனனுடன் இணைவதன் மூலம் ஒரு புதிய ஹிட் படத்தை கொடுக்க வாய்ப்புள்ளது. ராமின் அடுத்த படமான #BoyapatiRapo -ன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. அது குறித்தான விவரம் அடுத்தடுத்து வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











