For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வெந்து தணிந்தது காடு கவுதம் மேனன் மீது பாய்வது ஏன்?..விமர்சனங்கள் சொல்வதென்ன?

  |

  சென்னை: வெந்து தணிந்தது காடு படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நேரடியாக சிம்பு தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

  வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ளது. சிம்பு உடல் எடையைக் குறைத்து மெனக்கிட்டுள்ளார்.

  இந்தப்படம் பெரும் வெற்றிபெறும் என எதிர்ப்பார்த்த நிலையில் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் இயக்குநர் கவுதம் மேனனை விமர்சிக்கின்றனர்.

  வெந்து தணிந்தது காடு படத்தில் உங்களால் என் உருவத்தை கேலி செய்து எழுத முடியவில்லை..சிம்பு பெருமிதம்?வெந்து தணிந்தது காடு படத்தில் உங்களால் என் உருவத்தை கேலி செய்து எழுத முடியவில்லை..சிம்பு பெருமிதம்?

   மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றி

  மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றி

  நடிகர் சிம்பு அவருடைய திரை வாழ்க்கையில் மிகவும் மெனக்கெடுத்து நடித்த படம் மாநாடு. இந்தப்படத்தில் அவர் தீவிர உடற்பயிற்சி செய்து எடை மெலிந்து நடித்தார். திரைக்கதையும் வலுவாக இருந்தாலும் வெங்கட்பிரபு இயக்கம் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தது. பலமாக எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தனம் படத்துக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. அதனால் படம் எதிர்பாராத வெற்றியை பெற்றுத்தந்தது.

   எதிர்பார்ப்பில் வெந்து தணிந்தது காடு

  எதிர்பார்ப்பில் வெந்து தணிந்தது காடு

  இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன். இசை ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு இணைந்ததாலும், சிம்பு உடல் மெலிந்து புதிய தோற்றத்துடன் இருந்தது, பின்னர் தாடியுடன் யாஷ் போல இருந்த காட்சிகள் ரசிகர்களுக்கு இந்த படம் ஏதோ பண்ண போகிறது. செம்மையா ஓட போகுதுன்னு எதிர்பார்த்தார்கள். வாசுதேவ மேனன் சிம்பு இதற்கு முன் இரண்டு படங்களில் இணைந்துள்ளனர். இரண்டு படங்களும் நன்றாக ஓடியுள்ளதால் இந்தப்படம் பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்த்தனர்.

   கேங்க்ஸ்டர் கதை விபரீத முயற்சியா

  கேங்க்ஸ்டர் கதை விபரீத முயற்சியா

  கவுதம் வாசுதேவ மேனன் காதலை மையமாக வைத்து படம் எடுப்பதில் வல்லவர். ஐபிஎஸ் அதிகாரிகளாக சூர்யாவையும், கமல்ஹாசனையும் வைத்து எடுத்த இரண்டு படங்களும் ஹிட் அடித்தன. ஒரு கேங்க்ஸ்டர் மூவி எடுப்பது இதுவே முதன்முறை ஆகும். அவரது முந்தைய கிரைம் கதைகளில் வில்லன்கள் வலுவாக இருப்பார்கள். ஆனால் வெந்து தணிந்தது காடு படம் கமல்ஹாசனின் நாயகன், ரஜினியின் பாட்சா போல் சென்னையிலிருந்து ஓடும் ஒருவர் அல்லது சென்னைக்கு சாதாரணமாக திரும்பும் கேரக்டர் போன்று கதை கொண்ட படம். இந்தப்படத்தில் இரண்டு முக்கிய விஷயங்கள் இல்லை என ப்ளூ சட்டை மாறன் சொன்னார். ஒன்று வலுவான வில்லன் இல்லை, இரண்டு கதாநாயகன் என்ன நோக்கத்துக்காக கேங்க்ஸ்டராக மாறுகிறார் என்பது சொல்லப்படவில்லை என்றார்.

  உண்மைதான் நாயகனுக்கு ஏதாவது நோக்கம் இருந்தால் அல்லது வலுவான வில்லன் இருந்தால் படம் த்ரில்லாக நகரும். கேஜிஎஃப்-2 படத்தில் நாயகனை கேங்க்ஸ்டராக காட்டியதால் மட்டும் படம் வெல்லவில்லை. பல வில்லன்கள் அவரை முறியடிக்க காத்திருக்க அவர் அனைவரையும் முறியடிப்பார். அதையும் பரபரப்பாக எடுத்திருப்பார்கள். கேங்க்ஸ்டர் மூவி என்பதால் வலுவான வில்லன் கேரக்டரை எதிர்பார்த்தார்கள். அதுவும் படத்தில் இல்லை. ரசிகர்கள் கொண்டாடும் சின்ன விஷயங்கள் படத்தில் இல்லாமல் இருந்தது. வழக்கமான புளித்துப்போன பம்பாய் போனால் கேங்க்ஸ்டர் ஆகிவிடுவான் என்கிற ஃபார்முலா ரசிகர்கள் ஆர்வத்தை குறைத்துவிட்டது என்றுதான் சொல்லணும்.

  கவுதம் மேனன் மட்டும் ஏன் விமர்சிக்கப்படுகிறார்
  நேற்று மேடையில் சிம்பு தனது பேச்சில் , "படத்தின் அடுத்த பாகத்தை என்னென்ன வச்சிருக்காங்கன்னு தெரியல கேட்டாத்தான் தெரியும், அது கொஞ்சம் ஜனரஞ்சகமா ரசிகர்கள் கத்தி எஞ்ஜாய் பண்ணுகிற மாதிரி அவங்கள திருப்தி படுத்துவது போல் ஒரு விஷயம் கொடுத்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்" என்று பகீரங்கமாக கவுதம் மேனனிடம் கோரிக்கை வைத்தார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அப்படி எடுத்தால் மட்டுமே தயாரிப்பேன் என்று சொன்னார்.

   சிம்பு, ஐசரி கணேஷ் ஏன் இப்படி சொல்ல வேண்டும்

  சிம்பு, ஐசரி கணேஷ் ஏன் இப்படி சொல்ல வேண்டும்

  தயாரிப்பாளரும் பார்ட் 2 பற்றி கோரிக்கை முதல் பாகம் எடுத்ததில் கதாநாயகன், தயாரிப்பாளர் இருவருக்கும் திருப்தி இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். காரணம் தயாரிப்பாளர் தனது பங்கை சரியாக செய்துவிட்டார். சிம்பு இதைவிட உடலை வருத்த முடியாது அந்த அளவுக்கு செய்துவிட்டார். இயக்குநரை நான் சொல்வதை செய்யுங்கள் என சொல்லவில்லை என்பதையும் சிம்பு பதிய வைத்து படம் கவுதம் மேனன் படம் மட்டுமே சொன்னதை செய்தேன் என பதிய வைத்து கவுதம் மேனன் பக்கம் பாலை தள்ளிவிட்டுள்ளார். இதனால் கதை, இயக்கத்துக்கு பொறுப்பான மேனன் விமர்சிக்கப்படுகிறார்.

  English summary
  The comment made directly by Simbu at the press conference of Venthu Thanindhathu Kadu is currently the talk of social media. Venthu Thanindhathu Kadu movie has been released with huge expectations. Simbu has lost weight. Expecting the film to be a huge hit, they are criticizing director Gautham Menon for not living up to expectations.,
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X