»   »  விடிவி கணேஷ் 'ஆசை' பட அஜீத் மாதிரியா இருக்கிறார்?

விடிவி கணேஷ் 'ஆசை' பட அஜீத் மாதிரியா இருக்கிறார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விடிவி கணேஷ் 'ஆசை' பட அஜீத் மாதிரி இருப்பதாக முத்தின கத்தரிக்கா படத்தில் ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது.

சுந்தர்.சி, பூனம் பஜ்வா, சதீஷ், விடிவி கணேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் படம் முத்தின கத்தரிக்கா.


அவ்னி மூவிஸ் தயாரித்திருக்கும் இப்படம் வருகின்ற 17ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.


முத்தின கத்திரிக்கா

முத்தின கத்திரிக்கா

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற வெள்ளிமூங்கா படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கும் படம் முத்தின கத்தரிக்கா. சுந்தர்.சி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை வெங்கட் ராகவன் இயக்க, சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். சுந்தர்.சியின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்திருக்கும் முத்தின கத்தரிக்காவின் வெளியீட்டு உரிமையை, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


வெளியீடு

வெளியீடு

வருகின்ற 17 ம் தேதி முத்தின கத்தரிக்கா உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனையொட்டி இப்படத்திற்கான விளம்பரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. சுந்தர்.சி படத்தில் எப்போதும் காமெடி சற்று தூக்கலாகவே இருக்கும். அதனை நிரூபிப்பது போல சதீஷ், யோகி பாபு, விடிவி கணேஷ், சிங்கம்புலி, ரவி மரியா என முன்னணி காமெடி நடிகர்கள் பலரும் இதில் இணைந்து நடித்துள்ளனர்.


ஆசை அஜீத்

ஆசை அஜீத்

இப்படத்தில் விடிவி கணேஷ், சுந்தர்.சிக்கு வில்லனாக நடித்திருக்கிறார். இந்நிலையில் படத்தின் விளம்பரங்களில் விடிவி கணேஷ், ஆசை அஜீத் மாதிரி இருப்பதாக வசனங்கள் வைத்துள்ளனர்.


விடிவி கணேஷ்: வீட்டுக்குப் போறேன்றியா? இல்ல என்னை விட்டுட்டுப் போறேன்றியா?


துணை நடிகை: அய்யோ நீங்க இப்படி சொல்லும்போது 'ஆசை' பட அஜீத் மாதிரியே இருக்கீங்க?


இதற்கு அஜீத் ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.எனக்கு இன்னொரு பேர் இருக்கு

எனக்கு இன்னொரு பேர் இருக்கு

முத்தின கத்திரிக்கா வெளியாகும் அதே நாளில், விடிவி கணேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படமும் வெளியாகிறது. முத்தின கத்தரிக்காவில் வில்லனாக நடித்திருக்கும் கணேஷ் இதில் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார். ஒரேநாளில் தான் நடித்திருக்கும் 2 படங்களும் வெளியாவதால் விடிவி கணேஷ் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.


English summary
VTV Ganesh Play a Baddie in Sundar.c's Muthina Kathirikai.The Movie hit the Screens on June 17th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil