»   »  கத்தி தெலுங்கு ரீமேக் ஏன் சூப்பர் டூப்பர் ஹிட்டாச்சு தெரியுமா?: இயக்குனர்

கத்தி தெலுங்கு ரீமேக் ஏன் சூப்பர் டூப்பர் ஹிட்டாச்சு தெரியுமா?: இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி எண் 150 சூப்பர் டூப்பர் ஹிட்டானதற்கான காரணத்தை இயக்குனர் வி.வி. விநாயக் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் தெலுங்கில் கைதி எண் 150 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. வி.வி. விநாயக் இயக்கிய இந்த படத்தில் சிரஞ்சீவியும், காஜல் அகர்வாலும் நடித்தனர்.

கடந்த 11ம் தேதி வெளியான படம் நான்கே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் படம் குறித்து விநாயக் கூறுகையில்,

ஹிட்

ஹிட்

கைதி எண் 150 ஹிட்டாக ஒரேயொரு காரணம் தான். அது சிரஞ்சீவி, அவரின் நடிப்பு தான் காரணம். முதல் நாள் படப்பிடிப்புக்கு அவர் வந்தபோதே படம் சூப்பர் ஹிட் என்பது எனக்கு தெரியும்.

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

2003ம் ஆண்டு அவர் என் இயக்கத்தில் நடித்த தாகூர் படத்தை விட தற்போது கிளாமராக உள்ளார். 1998களில் இருந்தது போன்றே இளமையாக தெரிகிறார். அவருக்கு மட்டும் இளமை கூடிக் கொண்டே போகிறது.

ஷூட்டிங்

ஷூட்டிங்

சிரஞ்சீவி அண்ணன் படப்பிடிப்பு தளத்தில் இருந்தாலே அனைவரின் கண்களும் அவர் மீது தான். அவர் எதுவும் செய்யத் தேவையில்லை. ஆனாலும் அவரை பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும்.

அர்ப்பணிப்பு

அர்ப்பணிப்பு

சிரஞ்சீவியின் அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது. எமோஷனல் காட்சிகளில் நடிக்கும் முன்பு அவர் யாரிடமும் பேசாமல் தனியாக அமர்ந்திருப்பார். இது அவரை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு தெரியும்.

டான்ஸ்

டான்ஸ்

சிரஞ்சீவியின் டான்ஸ் அட்டகாசம். அவரது ஸ்டெப்களுக்கு நான் ஓகே சொன்னாலும் இன்னொரு டேக்குன்னு கேட்டு வாங்கி ஆடுவார். அதன் பிறகு அதை வீடியோவில் பார்த்தாலே புல்லரிக்கும்.

English summary
Director VV Vinayak said that the one and only reason for the success of Khaidi No 150 is Megastar Chiranjeevi and his charisma.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil