»   »  'வாகா' பர்ஸ்ட் லுக் வெளியானது... தீபாவளிக்கு டிரெய்லர்

'வாகா' பர்ஸ்ட் லுக் வெளியானது... தீபாவளிக்கு டிரெய்லர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம் பிரபுவின் வாகா பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. படத்தின் டிரெய்லர் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.

நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ் படங்களை இயக்கிய ஜி.என்.ஆர் குமரவேலன் தற்போது விக்ரம் பிரபுவை வைத்து வாகா திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

விக்ரம் பிரபுவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெள்ளக்கார துரை மற்றும் இது என்ன மாயம் போன்ற படங்கள் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

எனவே மீண்டும் ஒரு வெற்றிப் படத்தை அளிக்க வேண்டும் என்ற முனைப்பில் தற்போது குமரவேலனின் வாகா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வாகாவில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து ரன்யா ராவ், துளசி ஆகியோர் நடித்து வருகின்றனர். டி.இமானின் இசையில் உருவாகும் இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி இருக்கிறது.

கை, கால்களில் சங்கிலி பிணைத்து விக்ரம் பிரபுவை துப்பாக்கி ஏந்திய 2 ராணுவ வீரர்கள் அழைத்துச் செல்வது போன்று முதல் பார்வையை வெளியிட்டு இருக்கின்றனர்.

தீபாவளியன்று படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து இருக்கின்றனர். முதல் பார்வை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் படத்தின் டிரெய்லரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

English summary
Vikram Prabhu's Wagah First Look Released on Today. the Film Makers Announced Wagah Trailer will be Released on Diwali Festival.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil