சிரஞ்சீயின் மெகா 154 டைட்டில் அப்டேட்… பொங்கலுக்கு சூறையாட வரும் வால்டேர் வீரைய்யா!

ஐதராபாத்: தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'காட்ஃபாதர்' திரைப்படம் 100 கோடி வசூலித்து அதிரடி காட்டியது.

மேகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவியுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் நடித்திருந்தார்.

இந்நிலையில், சிரஞ்சீவி நடித்து வரும் 'மெஹா 154' படத்தின் டைட்டில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

மெஹா ஸ்டார் சிரஞ்சீவி

மெஹா ஸ்டார் சிரஞ்சீவி

டோலிவுட் திரையுலகில் மெகா ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சிரஞ்சீவியின் நடிப்பில் கடைசியாக 'காட்ஃபாதர்' திரைப்படம் வெளியானது. மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, சல்மான் கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம், மலையாளத்தில் வெற்றிப் பெற்ற 'லூசிபர்' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி வெளியான காட்ஃபாதர் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சிரஞ்சீவிக்கு கம்பேக் படமாக அமைந்தது. காட்ஃபாதர் படத்துக்கு முன்னர் வெளியான 'ஆச்சார்யா' மிகப் பெரிய தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

மெகா 154 டைட்டில்

மெகா 154 டைட்டில்

காட்ஃபாதர் படத்தை தொடர்ந்து தனது 154 வது படத்தில் நடித்து வந்தார் சிரஞ்சீவி. ஏற்கனவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்ட நிலையில், இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. கே.எஸ்.ரவீந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்தில், ரவி தேஜா, ஸ்ருதி ஹாசன் இருவரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கின்றனர். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு மெகா 154 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்திற்கு வால்டேர் வீரைய்யா என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

லோக்கல் தாதா

லோக்கல் தாதா

வால்டேர் வீரைய்யா டைட்டில் டீசரில் சிரஞ்சீவியின் லுக் படு மிரட்டலாக உருவாகியுள்ளது. லுங்கி கட்டிக் கொண்டு வாயில் பீடியுடன் லோக்கல் ரவுடியாக கெத்து காட்டும் சிரஞ்சீவியின் மேனரிசம் டோலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல், தேவி ஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசையும் செம்ம மாஸ்ஸாக அமைந்துள்ளது. காட்ஃபாதர் படத்தில் பொலிடிக்கல் கேங்ஸ்டராக நடித்த சிரஞ்சீவி, வால்டேர் வீரைய்யாவில் லோக்கலாக கெத்து காட்ட ரெடியாகிவிட்டார்.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

வால்டேர் வீரைய்யா டைட்டில் டீசருடன் படத்தின் ரிலீஸையும் உறுதி செய்துள்ளது படக்குழு. அதன்படி இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே பிரபாஸின் ஆதிபுருஷ், விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய படங்கள் பொங்கல் ரேஸில் களமிறங்கவுள்ள நிலையில், இப்போது மெகாஸ்டார் சிரஞ்சீவியும் 'வால்டேர் வீரைய்யா' படத்தை வெளியிட முடிவு செய்துவிட்டார். இன்னொரு பக்கம் பாலையாவின் வீர சிம்ஹா ரெட்டி படமும் பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதனால், இப்போது பொங்கல் ரேஸ் களைக்கட்டத் தொடங்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X