»   »  வசூலில் 'மாஸ்' றெக்க: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வசூலில் 'மாஸ்' றெக்க: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான றெக்க ரிலீஸான அன்று மட்டும் தமிழகத்தில் ரூ. 3.5 கோடி வசூல் செய்துள்ளது.

ரத்னசிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்த றெக்க கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படத்தை பார்க்கிறவர்கள் அனைவரும் விஜய் சேதுபதியின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள்.


Wanna know Rekka first day collection?

லட்சுமி மேனனை தான் மேக்கப்பிற்காக கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். றெக்க ரிலீஸான அன்று தமிழகத்தில் மட்டும் ரூ.3.5 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் விஜய் சேதுபதி சத்தமில்லாமல் ஓபனிங் கிங் ஆகியுள்ளார்.


அவர் நடிப்பில் இந்த ஆண்டில் இதுவரை ஆறு படங்கள் ரிலீஸாகியுள்ளன. அந்த ஆறு படங்களுமே ஹிட்டாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பிற நடிகர்கள் ஒரு ஹிட் கொடுக்க கஷ்டப்படும்போது விஜய் சேதுபதி அடுத்தடுத்து ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.


இந்த ஆண்டு விஜய் சேதுபதி ஆண்டு என்று சொல்லும் அளவுக்கு அவரது படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன.

English summary
Vijay Sethupathy's Rekka has collected Rs. 3.5 crore in Tamil Nadu alone on the first day of its release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil