»   »  வாவ், ரிலீஸான மூன்று நாட்களில் ரூ.17 கோடி வசூல் செய்த தூங்காவனம்

வாவ், ரிலீஸான மூன்று நாட்களில் ரூ.17 கோடி வசூல் செய்த தூங்காவனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸன் நடிப்பில் வெளியான தூங்காவனம் படம் ரிலீஸான மூன்றாவது நாள் தமிழகத்தில் ரூ.5 கோடி வசூல் செய்துள்ளது.

ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், ஆஷா சரத் உள்ளிட்டோர் நடித்த தூங்காவனம் படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது. தீபாவளி அன்று தமிழகத்தில் மழை கொட்டித் தீர்த்தபோதிலும் தூங்காவனம் ஓடிய தியேட்டர்களில் 70 சதவீத இருக்கைகள் நிரம்பின.


கமல் ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துள்ளது. மேலும் விமர்சகர்களும் படம் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


ரூ.4 கோடி

ரூ.4 கோடி

தூங்காவனம் ரிலீஸான அன்று தான் அஜீத்தின் வேதாளம் படமும் ரிலீஸானது. அந்த போட்டியை சமாளித்து தூங்காவனம் ரிலீஸான அன்று மட்டும் தமிழகத்தில் ரூ.4 கோடி வசூல் செய்தது.


ரூ.8 கோடி

ரூ.8 கோடி

முதல் நாள் ரூ.4 கோடி வசூல் செய்தாலும் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபீஸில் தூங்காவனம் பிக்கப்பாகி ரூ. 8 கோடி வசூலித்துள்ளது.


ரூ.5 கோடி

ரூ.5 கோடி

தூங்காவனம் ரிலீஸான மூன்றாவது நாளில் ரூ.5 கோடி வசூல் செய்துள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் அதைப் பற்றி நல்லவிதமாக பேசுவதால் தியேட்டர்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.


வார இறுதிநாட்கள்

வார இறுதிநாட்கள்

நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தியேட்டர்களுக்கு வருவோரின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் தூங்காவனம் வார இறுதி நாட்களில் வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


English summary
Thoongavanam is doing good in box office inspite of tough competition from Vedhalam. Kamal starrer has collected Rs. 17 crores in three days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil