»   »  ஜில் ஜில் ரமாமணியை பார்க்கணுமா?: இன்று இரவு 7 மணிக்கு பார்க்கலாம்

ஜில் ஜில் ரமாமணியை பார்க்கணுமா?: இன்று இரவு 7 மணிக்கு பார்க்கலாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மனோரமா ஜில் ஜில் ரமாமணியாக நடிப்பில் அசத்திய தில்லானா மோகனாம்பாள் படம் இன்று இரவு 7 மணிக்கு கே டிவியில் ஒளிபரப்பாகிறது.

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புரிந்த ஆச்சி மனோரமா தனது 78வது வயதில் மரணம் அடைந்தார். சென்னை தி. நகரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Manorama

அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் அனைவரும் தில்லானா மோகனாம்பாள் படத்தில் மனோரமா ஜில் ஜில் ரமாமணியாக நடித்திருந்ததை பற்றியே பேசினர். மனோரமா எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் தனக்கு ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் தான் பிடிக்கும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்திருந்தார்.

மனோரமா பற்றி நடிகர் சிவகுமார் கூறுகையில்,

மனோரமா ஜில் ஜில் ரமாமணியாக நடித்திருந்ததை பார்த்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனே மிரண்டுவிட்டார். இந்த மனோரமா நம்மை நடிப்பில் தூக்கி சாப்பிட்டுவிடுவாள் போன்று என்று தெரிவித்தார் என்றார்.

இப்படி ஆளாளுக்கு புகழ்ந்து பேசிய ஜில் ஜில் ரமாமணியை இன்று இரவு நீங்கள் பார்க்கலாம். கே டிவியில் இன்று இரவு 7 மணிக்கு தில்லானா மோகனாம்பாள் படம் ஒளிப்பரப்பாகிறது.

English summary
Manorama scared Sivaji Ganesan by acting extra ordinarily in Thillana Mohanambal as Jil Jil Ramamani. Thillana Mohamanambal will be shown in K Tv tonight.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil