War 2 6th day box office: இந்தியாவில் நாங்க தான் கெத்து.. 6வது நாளில் வார் 2 வசூல் எவ்வளவு?
சென்னை: அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி மற்றும் அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வார் 2 திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்துடன் மோதிய நிலையிலும், தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருவதாக யஷ் ராஜ் சோப்ரா ஃபிலிம்ஸும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் முதல் நாளில் இந்தியளவில் 65 கோடி ரூபாய் வசூல் அள்ளிய நிலையில், 6வது நாளான நேற்று செவ்வாய்க்கிழமை வெறும் 9 கோடி மட்டுமே இந்தியாவில் வசூல் ஈட்டியிருந்தது. இதுவரை இந்தியாவில் 216 கோடி ரூபாய் வசூலை கூலி எடுத்துள்ளதாக sacknilk வெப்சைட் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வார் 2 திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாய் வசூலை தாண்டியதாக யஷ் ராஜ் சோப்ரா நிறுவனம் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் அந்த படம் செய்துள்ள வசூல் சாதனை குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
பாக்ஸ் ஆபீஸில் கடும் போட்டி: பெரிய நடிகர்கள் படங்கள் என்றாலே நல்ல படம் எது? என்கிற போட்டியை விட எந்த படம் அதிக மக்களை திரையரங்குக்கு அழைத்து வந்து அவர்களின் டிக்கெட்டு காசை பிடுங்கியது என்கிற பாக்ஸ் ஆபீஸ் கணக்குத் தான் தற்போது முக்கியமானதாக ஆகிவிட்டது. கூலி மற்றும் வார் 2 உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் கெத்துக் காட்டி வருகின்றன.
500 கோடியை நோக்கி கூலி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான், செளபின் சாஹீர், நித்யா ராம், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சார்லி, மாறன், காளி வெங்கட், மோனிஷா பிளெஸ்ஸி, ரெபா மோனிகா ஜான் மற்றும் பூஜா ஹெக்டே நடித்து வெளியான கூலி திரைப்படம் முதல் 4 நாட்களிலேயே 404 கோடியை அள்ளிய நிலையில், திங்கள் மற்றும் செவ்வாய் வசூலை சேர்த்து 450 கோடிக்கும் அதிகமாக உள்ளது என்கின்றனர். விரைவில் 500 கோடி வசூலை கூலி எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வார் 2 அதிகம்: வார் 2 திரைப்படம் ஃபிளாப் என பாலிவுட்டிலேயே சொல்லப்பட்டாலும் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆரின் ஆக்ஷன் காட்சிகளையும் கியாரா அத்வானியின் பிகினி காட்சியையும் ரசிகர்கள் தியேட்டரில் ரசித்துக் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் கூலி படத்தை விட வார் 2 தான் வசூலில் அதிகம் என்கின்றனர். 300 கோடி ரூபாய் வசூலில் 240 கோடி ரூபாய் இந்தியாவில் இருந்தே வந்திருப்பதாக வார் 2 தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
6வது நாள் வசூல் எவ்வளவு?: பிரபல பாக்ஸ் ஆபீஸ் டிராக்கிங் வெப்சைட்டான சாக்னிக்கின் கணக்குப்படி பார்த்தால் வார் 2 திரைப்படம் 6 நாட்களில் இந்தியாவில் வெறும் 192.75 கோடி தான் வசூல் செய்துள்ளது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் 240 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படி ஏரியா வைஸ் வசூல் பிரேக்கிங்கை வெளியிட்டால் கூலி இந்தியாவில் எவ்வளவு? ஓவர்சீஸில் எவ்வளவு? என்று தெரியவரும்.


Click it and Unblock the Notifications











