Coolie - வார் 2வால் கூலி வசூலை தொடக்கூட முடியாது.. பாக்ஸ் ஆஃபிஸ் ரேஸ் ஓவரா?.. ரஜினிதான் வின்னர்!

சென்னை: கூலி திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. ரஜினியின் படம் என்பதால் இது எவ்வளவு வசூலிக்கும் என்ற கேள்விதான் அனைவரிடமும் இருந்தது. அதுமட்டுமின்றி இப்படத்துக்கு போட்டியாக ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் வார் 2 படமும் ரிலீஸானது. இரண்டு படங்களிலுமே பெரிய ஸ்டார்கள் இருந்ததால் எந்தப் படம் வசூலிலும் வெல்லும் என்ற ஆவல் திரைத்துறையிலும் இருந்தது.

ரஜினி - லோகேஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும் கூலி சில நாட்களுக்கு முன்பு வெளியானது. உலகம் முழுவதும் 5,000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்துக்கு விமர்சன ரீதியாக போதிய வரவேற்பு இல்லை. லியோ படத்தில் எப்படி லோகேஷை போட்டு ரசிகர்கள் பொளந்தார்களோ அதே நிலைமைதான் கூலி படத்துக்கும் இருக்கிறது. விடை தெரியாத கேள்விகள் பல படத்தில் இருக்கின்றன.

வார் 2: இது ஒருபக்கம் இருக்க கூலிக்கு போட்டியாக வார் 2 திரைப்படமும் 14ஆம் தேதி ரிலீஸானது. இதில் ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்.டி.ஆர், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இப்படத்திலும் இன்னொரு மொழி ஸ்டாரான ஜூனியர் என்.டி.ஆர் உள்ளே வந்தார். அதன் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படத்துக்கு வியாபாரம் ஆகும் என்பது படக்குழுவின் எண்ணம்.

War 2 has collected less at the box office on its fourth day than Coolie
Photo Credit:

அதுவே பரவாயில்லை: கூலி படத்துக்கு சென்றவர்கள் எல்லாம்; இந்த பான் இந்தியாதான் ஏமாற்றிவிட்டது; வார் 2 காப்பாற்றும் என்று நினைத்தார்கள். ஆனால் அப்படத்தை பார்த்தவர்கள் கூலி இதற்கு எவ்வளவோ மேல் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இதன் காரணமாக முதல் நாளில் கூலி வசூலுக்கு டஃப் கொடுத்த வார் 2 அடுத்தடுத்த நாட்களில் இருக்கும் இடம் தெரியாமல் போக ஆரம்பித்திருக்கிறது.

மாஸ் காண்பிக்கும் ரஜினிகாந்த்: முக்கியமாக பாலிவுட்டிலேயேகூட வார் 2 செமத்தியான அடி வாங்கியிருக்கிறது. எனவே படத்துக்கு வரும் கூட்டம் குறைந்ததால்; கூலி படத்துக்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது முதலில் 3,500 தியேட்டர்களில் ரிலீஸான அப்படத்துக்கு; இப்போது 4,500 தியேட்டர்கள்வரை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்கூட முடியாது: இதனால் ஏற்கனவே வலியோடு இருக்கும் வார் 2வுக்கு மேற்கொண்டு அடி விழுந்தது. ரிலீஸாகி நான்காவது நாளான நேற்று வார் 2 31 கோடி ரூபாயை மட்டும் வசூலித்து இந்தியாவில் மொத்தம் 173 கோடி ரூபாயும், கூலி திரைப்படம் நேற்று 35 கோடி ரூபாயை வசூலித்து இந்திய அளவில் 193 கோடி ரூபாயும் வசூலித்திருப்பதாக Sacnilk வலைதளம் தெரிவித்திருக்கிறது. அந்த வலைதள கணக்குப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் கூலி லீடிங்கில் இருக்கிறது. இனி வரும் நாட்களிலும் வார் 2வுக்கு கூட்டம் வராது. எனவே பாக்ஸ் ஆஃபிஸ் ரேஸிலிருந்து அந்தப் படம் வெளியேறும் சூழல் உருவாகிவிட்டது. அதனால் ரஜினிதான் வின்னர் என ரசிகர்கள் அறிவிக்க தொடங்கிவிட்டார்கள்.

More from Filmibeat

Read more about: coolie war 2 கூலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X