»   »  கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்னார்னு பார்த்துட்டு வாங்க: ஊழியர்களுக்கு 350 டிக்கெட் புக் செய்த கலெக்டர்

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்னார்னு பார்த்துட்டு வாங்க: ஊழியர்களுக்கு 350 டிக்கெட் புக் செய்த கலெக்டர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாரங்கால்: பாகுபலி 2 படம் பார்க்க ரசிகர்கள் முந்தியடிக்கும்போது வாரங்கால் மாவட்ட கலெக்டர் 350 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளார்.

பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோரை வைத்து ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி 2 படம் நாளை ரிலீஸாக உள்ளது. படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.


கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பது நாளை தெரிந்துவிடும்.


வாரங்கால்

வாரங்கால்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கால் மாவட்ட கலெக்டர் அம்ரபாலி கட்டா. இளம்பெண்ணான அவர் மிகவும் திறமையாக செயல்படுவதாக முதல்வர் கே. சந்திரசேகர் ராவால் பாராட்டப்பட்டார். அவர் பாகுபலி 2 முதல் நாள் காட்சிக்கு 350 டிக்கெட்டுகள் புக் செய்துள்ளார்.


பாகுபலி 2

பாகுபலி 2

வாரங்கால் நகரத்தை 300 அரசு அதிகாரிகள், ஊழியர்கள் நேரம், காலம் பார்க்காமல் அண்மையில் அழகுபடுத்தினர். அவர்களின் கடின உழைப்பை பாராட்டியே அவர்களுக்காக பாகுபலி 2 டிக்கெட்டுகளை புக் செய்துள்ளார் கலெக்டர். நாளை காலை முதல் காட்சியை அவர்கள் கண்டு ரசிக்க உள்ளனர்.


ஆந்திரா

ஆந்திரா

பாகுபலி 2 படம் ஆந்திராவில் தினமும் 6 காட்சிகளும், தெலுங்கானாவில் 5 காட்சிகளுமாக திரையிடப்பட உள்ளது. இதற்கு முறைப்படி மாநில அரசுகளிடம் அனுமதி பெற்றுள்ளார் ராஜமவுலி.


போலீஸ்காரர்

போலீஸ்காரர்

வாரங்காலை சேர்ந்த போலீஸ்காரர் விஜயகுமார் என்பவர் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை தெரிந்து கொள்ள பாகுபலி 2 படத்தை பார்க்க நாளை விடுப்பு கோரி கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Warangal district collector Amrapali has booked 350 tickets of Baahubali 2 to reward those who worked in the beautification of the city.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil