»   »  சட்டையை கழற்றி முன்னழகை காட்டச் சொன்னார்: இயக்குனர் மீது பிரபல நடிகை புகார்

சட்டையை கழற்றி முன்னழகை காட்டச் சொன்னார்: இயக்குனர் மீது பிரபல நடிகை புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: சட்டையை கழற்றிவிட்டு முன்னழகை காட்டுமாறு இயக்குனர் ஒருவர் தன்னிடம் கூறியதாக ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் நடிகைகள் தற்போது தான் அது குறித்து தைரியமாக பேசத் துவங்கியுள்ளனர்.

சில நடிகைகளை வெயின்ஸ்டீன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

புயல்

புயல்

ஹாலிவுட்டில் வெயின்ஸ்டீன் பிரச்சனை பெரிதாக வெடித்துள்ளது. பாலியல் தொல்லை குறித்து ஒவ்வொரு நடிகையாக பேசத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் பிரபல நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸும் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார்.

நடிப்பு

நடிப்பு

நடிக்க வந்த புதிதில் ஆடிஷனுக்கு சென்றபோது இயக்குனர் ஒருவர் ஜெனிபர் லோபஸை பார்த்து சட்டையை கழற்றி முன்னழகை காட்டுமாறு கூறியுள்ளார்.

மறுப்பு

மறுப்பு

திரையுலகில் புதிதாக வந்தபோதிலும் இயக்குனர் சொன்னதை செய்ய ஜெனிபர் லோபஸ் மறுத்துவிட்டார். மறுத்தால் பட வாய்ப்பு கிடைக்காமல் போகுமோ என்ற பயமும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. வாய்ப்பு போனால் பரவாயில்லை என்று தில்லாக பேசியுள்ளார்.

பதட்டம்

பதட்டம்

இயக்குனர் அப்படி கேட்டதும் நான் முடியாது என்றேன். ஆனால் அப்போது என் இதயம் வேகமாகத் துடித்தது. இதயத்துடிப்பு எனக்கே கேட்டது. அந்த அளவுக்கு பதட்டமாக இருந்தேன் என்கிறார் ஜெனிபர் லோபஸ்.

 அந்த நபர்

அந்த நபர்

ஜெனிபர் லோபஸிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட அந்த இயக்குனர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் ஆரம்ப காலத்தில் யார், யார் இயக்கத்தில் நடித்தார் என்ற பட்டியலை பார்த்து ரசிகர்கள் கணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

English summary
Singer-actor Jennifer Lopez has revealed that she was once asked by a director to remove her top during an audition in the beginning of her career. The actor said she flatly refused even though she was afraid of rejecting the director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X