»   »  காலாவின் காட்சிகளை கண்டபடி வெட்டினார்களா சென்சார்? #Kaala

காலாவின் காட்சிகளை கண்டபடி வெட்டினார்களா சென்சார்? #Kaala

Posted By:
Subscribe to Oneindia Tamil
காலா ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? - Kaala

"காலாவுக்கு யு சான்றிதழ் கிடைக்கவில்லை... ஏ அல்லது யுஏதான் கிடைக்கும். படம் பார்த்த தணிக்கைக் குழு தாறு மாறாக 14 கட்கள் கொடுத்துள்ளனர்," என்றெல்லாம் கடந்த மூன்று தினங்களாக சமூக வலைத் தளங்களில் செய்திகள் உலா வருகின்றன.

ஆனால் இதை எல்லாம் படக்குழுவினர் மறுத்துள்ளனர். தணிக்கைக்கு விண்ணப்பித்து சான்றிதழ் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன என்றும், மறு தணிக்கைக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தனர். மேலும் படத்துக்கு 14 கட்கள் கொடுத்ததாக வந்த செய்திக்கும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Was Kaala censored?

இன்னும் காலா படம் தணிக்கை செய்யப்படவில்லையாம். இந்த வாரம் தணிக்கை செய்யப்பட்டு, சான்றிதழும் கிடைத்துவிடும் என எதிர்ப்பார்ப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

காலா படத்தில் ரஜினிகாந்த் மும்பை தாதா கதாபாத்திரத்தில், நெல்லைத் தமிழ் பேசி நடித்துள்ளார். கதாநாயகியாக ஹ்யூமா குரேஷி நடித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கி உள்ளார்.

English summary
Is Rajinikanth's Kaala censored with huge Cuts? Here is producer's side explanation.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X