»   »  துபாய் ஹோட்டல் அறை வாசலில் இளம் ஹீரோவிடம் கெஞ்சிய நடிகை?: வைரலான வீடியோ

துபாய் ஹோட்டல் அறை வாசலில் இளம் ஹீரோவிடம் கெஞ்சிய நடிகை?: வைரலான வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: துபாயில் ஹோட்டல் அறை வாசலில் நடிகை மாஹிரா கான் நடிகர் ரன்பிர் கபூரிடம் இருகை கூப்பி கெஞ்சும்படியான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

ஷாருக்கானின் ரயீஸ் படம் மூலம் பாலிவுட் வந்தவர் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை மாஹிரா கான். பாகிஸ்தான் கலைஞர்களை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என சர்ச்சை கிளம்பியதால் மாஹிரா நாடு திரும்பினார்.

படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

துபாய்

துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாஹிரா கான், பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஹோட்டல் அறை வாசலில் மாஹிரா ரன்பிரிடம் இருகை கூப்பி கெஞ்சும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. வீடியோவில் சப்தம் இல்லை.

மாஹிரா

நிகழ்ச்சியில் ரன்பிர் கபூர் மாஹிரா கானிடம் ஏதோ கூறுகிறார். அதை கேட்ட மாஹிரா பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

ரன்பிர்

ரன்பிர்

மாஹிரா ரன்பிர் கபூரை பார்த்த மகிழ்ச்சியில் அப்படி பேசியுள்ளார். அவர் அனைவரிடமும் இப்படித் தான் பேசுகிறார் என்று விபரம் தெரிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரயீஸ்

ரயீஸ்

ஷாருக்கானின் ரயீஸ் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நினைத்தும் தடையால் வர முடியவில்லை. தடையை மீறி வர நினைத்தேன் என மாஹிரா ரன்பிரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

English summary
A video which shows Mahira Khan engaged in a conversation with Ranbir Kapoor outside their hotel room in Dubai has taken the Internet by storm and at the first look of it, it looks like Mahira is pleading with Ranbir for something but since the video has no audio, nobody is sure what exactly the two actors were talking about.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil