»   »  ஜெமினி கணேசன் மகளுக்கும், நடிகர் சஞ்சய் தத்துக்கும் ரகசிய திருமணமா?: தீயாக பரவிய தகவல்

ஜெமினி கணேசன் மகளுக்கும், நடிகர் சஞ்சய் தத்துக்கும் ரகசிய திருமணமா?: தீயாக பரவிய தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ரேகாவுக்கும், நடிகர் சஞ்சய் தத்துக்கும் ரகசியமாக திருமணமாகிவிட்டது என்றும், அதனால் தான் நடிகை நெற்றியில் குங்குமம் வைக்கிறார் என்றும் பேச்சு கிளம்பியுள்ளது.

காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகளான பாலிவுட் நடிகை ரேகாவின் கணவர் திருமணமான ஓராண்டில் இறந்துவிட்டார். ஆனால் ரேகா தற்போதும் பட்டுடுத்தி நெற்றியில் குங்குமம் வைத்து தான் வெளியே வருகிறார்.

இந்நிலையில் ரேகா பற்றிய செய்தி ஒன்று தீயாக பரவியுள்ளது.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

ரேகாவுக்கும், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு ரகசிய திருமணம் நடந்துவிட்டது என்றும், அதனால் தான் அவர் நெற்றியில் குங்குமம் வைப்பதாகவும் பேச்சு கிளம்பியுள்ளது.

திடீர் என?

திடீர் என?

ரேகாவுக்கும், சஞ்சய் தத்துக்கும் திருமணமானதாக யாசர் உஸ்மான் எழுதிய ரேகா-தி அன்டோல்ட் ஸ்டோரி புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இல்லை

இல்லை

ரேகாவுக்கும், சஞ்சய் தத்துக்கும் திருமணம் நடந்ததாக என் புத்தகத்தில் குறிப்பிடவில்லை என்று யாசர் உஸ்மான் பிரபல ஆங்கில செய்தித்தாளுக்கு பேட்டி அளித்துள்ளார்.

வதந்தி

வதந்தி

ரேகாவும், சஞ்சய் தத்தும் ஒரு படத்தில் (ஜமீன் ஆஸ்மான் என்று நினைக்கிறேன்) சேர்ந்து நடித்தபோது அவர்களுக்கு இடையே தொடர்பு ஏற்பட்டதாக வதந்திகள் பரவியது. அப்போது அவர்களுக்கு திருமணமாகிவிட்டதாகக் கூட கூறப்பட்டது. அந்த வதந்தியை சஞ்சய் மறுத்ததால் அது குறித்து பலரும் பேசினார்கள். அவர்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்று யாசர் உஸ்மான் தெரிவித்துள்ளார்.

English summary
As shocking as it might sound, rumours are doing the rounds that Rekha was secretly married to Sanjay Dutt and that's the reason why the actress applies vermillion on her forehead all the time.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil