»   »  ஆத்தீ... விவேகம் படத்தில் சொன்ன ஆபத்து நிஜமாவே நடந்துச்சா?

ஆத்தீ... விவேகம் படத்தில் சொன்ன ஆபத்து நிஜமாவே நடந்துச்சா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோரின் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் திரைக்கு வந்த படம் 'விவேகம்'.

இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. ஆனால், எதிர்மறையான விமர்சனங்களால் படத்தின் வசூலுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.

சென்னையில் மட்டுமே இந்தப் படம் ரூபாய் 8.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இன்னும் பல திரையரங்குகளில் தொடர்ந்து திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

செயற்கை பூகம்பம் :

செயற்கை பூகம்பம் :

படத்தில் விவேக் ஓபராய் ஒரு குறிப்பிட்ட ஏஜென்ஸிக்கு வேலை செய்பவராக வருவார். தாங்கள் இன்னும் சிறிது நேரத்தில் செயற்கையான பூகம்பத்தை உருவாக்கி, அதன் மூலம் போர் உண்டாக்கவுள்ளதாகவும் கிளைமாக்ஸில் அஜித்திடம் கூறுவார் விவேக் ஓபராய்.

உண்மையிலேயே நிகழ்ந்துவிட்டது :

உண்மையிலேயே நிகழ்ந்துவிட்டது :

அந்தக் காட்சி கற்பனையாக உருவாக்கப்பட்டதுதான் என்றாலும், அவர் கூறியது போலவே சமீபத்தில் வடகொரியாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் இதை விவேகம் படத்துடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.

5.7 ரிக்டர் நிலநடுக்கம் :

5.7 ரிக்டர் நிலநடுக்கம் :

வட கொரியா ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனை நடத்தி செயற்கை நிலநடுக்கத்தை உண்டாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 எனப் பதிவாகியிருப்பதாகத் தென் கொரியா தெரிவித்திருக்கிறது.

அச்சுறுத்தும் வட கொரியா :

அச்சுறுத்தும் வட கொரியா :

ஏற்கனவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியா வெற்றிகரமாக மேற்கொண்டது. தற்போது அணுகுண்டு சோதனையும் வெற்றிகரமாக அமைந்துள்ளதால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக வட கொரியா திகழும்.

English summary
In 'Vivekam', Vivek Oberoi works for a particular agency and tells, 'will create an artificial earthquake in a short time, causing war'. This scene became true in north korea, as they made artificial earth quake by using hydrogen bomb.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X