»   »  ஜோக்கர் படம் 10 ரூபாய்க்கு பார்க்கலாம்... ஒரு புதிய முயற்சி

ஜோக்கர் படம் 10 ரூபாய்க்கு பார்க்கலாம்... ஒரு புதிய முயற்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அரசு வரிச்சலுகை கொடுத்தாலும் ஆயிரக்கணக்கில் டிக்கெட் வசூலித்து கொள்ளையடிக்கும் தியேட்டர்களுக்கு மத்தியில், ஜோக்கர் படத்திற்காக திருப்பத்தூர் ஸ்ரீ ராமஜெயம் தியேட்டரில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 4 காட்சிகளும் 10 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நல்ல சினிமாவை பொது மக்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக இதை செய்ய உள்ளனராம்.

குக்கூ பட இயக்குநர் ராஜு முருகன் இயக்கிய படம் ஜோக்கர். கடந்த வாரம் வெளியான ஜோக்கர் படத்துக்கு ஓப்பனிங் என்கிற பரபரப்பு இல்லை என்றாலும், பத்திரிகைகளின் விமர்சனங்கள் வெளியான பிறகு சூடுபிடித்து இப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


Watch 'Joker' for Rs.10-Any class

ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் பெரும் பாராட்டுக்களுடன்வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


மக்கள் பிரச்சினை


மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் சம்பந்தமாக சில தினங்களுக்கு முன் வித்தியாசமான ஒரு விளம்பரம் வெளியாகியிருந்தது.


திருட்டு விசிடி


அந்த விளம்பரத்தில் ''தோழர்களே! திருட்டு வி.சி.டி.யில், இணைய தரவிறக்கத்தில் படம் பார்ப்பதும் ஊழலின், சுரண்டலின் இன்னொரு அங்கம் தான். ஒரு சினிமா பலநூறு தொழிலாளர்களின் வியர்வை, சில வருட உழைப்பு!


வங்கிக்கணக்கு


இதையும் தாண்டி திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்கும் தோழர்கள், அதற்கான நியாயமான தொகையை கீழ்க்கண்ட வங்கி கணக்கில் செலுத்திவிடுங்கள். நீங்கள் அனுப்புகிற பணம் இந்த தேசத்தில் கழிவறை இல்லாத குடிமக்களுக்கு கழிவறை கட்டித்தர பயன்படுத்தப்படும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு வங்கிக் கணக்கு எண்ணையும் வெளியிட்டிருந்தனர்.


ரூ. 10 கட்டணம்


இந்த விளம்பரத்தை அடுத்து இப்போது இன்னொரு விளம்பரம்.. திருப்பத்தூர் ஸ்ரீ ராமஜெயம் தியேட்டரில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 4 காட்சிகளும் 10 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. நல்ல சினிமாவை பொது மக்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக இதை செய்ய உள்ளனராம்.


கட்டண சலுகை கிடைக்குமா


வரிச்சலுகை கொடுத்தாலும் தியேட்டரில் நடைபெறும் கட்டணக் கொள்ளையினால்தான் நல்ல படத்தைக் கூட தியேட்டருக்கு வந்து பார்க்கத் தயங்குகின்றனர் மக்கள். குடும்பத்துடன் தியேட்டர் போனால் 2000 ரூபாய் வரை காலியாகிவிடும் இதேபோல வாரத்திற்கு ஒருநாள் பிரபல நடிகர்கள், இயக்குநர்களின் படங்களை சலுகை விலையில் வெளியிட்டால் பலரும் பார்த்து ரசிப்பார்களே என்கின்றனர் சினிமா ரசிகர்கள்.

English summary
While Raju Murugan and team seem to have mastered this art, this Thirupattur theatre is doing its part too. This Sunday, in an effort to spread goodwill, all tickets at the theatre, will cost only Rs. 10, to watch Joker. Here's your chance to good movie time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more