»   »  'மாலை நேரத்து மயக்கம்'.. திறந்த மனதுடன் வாருங்கள், பாருங்கள் - கீதாஞ்சலி செல்வராகவன்

'மாலை நேரத்து மயக்கம்'.. திறந்த மனதுடன் வாருங்கள், பாருங்கள் - கீதாஞ்சலி செல்வராகவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தை திறந்த மனதுடன் பார்க்க வேண்டும் என்று இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன் கூறியிருக்கிறார்.

செல்வராகவன் எழுத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியிருக்கும் படம் மாலை நேரத்து மயக்கம். புதுமுகங்கள் பாலகிருஷ்ணன், வாமிகாவுடன் இணைந்து அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.


வருகின்ற தமிழ் புத்தாண்டு தினத்தில் மாலை நேரத்து மயக்கம் வெளியாகிறது.


மாலை நேரத்து மயக்கம்

மாலை நேரத்து மயக்கம்

செல்வராகவன் எழுத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியிருக்கும் படம் மாலை நேரத்து மயக்கம்.புதுமுகங்கள் பாலகிருஷ்ணன், வாமிகாவுடன் இணைந்து அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். தணிக்கைக் குழுவினர் 'ஏ' சான்றிதழ் அளித்திருக்கும் இப்படம் வருகின்ற தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் உலகமெங்கும் வெளியாகிறது.
படத்தின் கதை

படத்தின் கதை

படத்தின் இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன் படம் குறித்து கூறும்போது "இந்தப் படம் ஒரு வழக்கமான காதல் கதையோ, காமெடிப் படமோ கிடையாது. படத்தின் நாயகி, நாயகனுக்கு இடையில் நடைபெறும் உருக்கமான காதலே மாலை நேரத்து மயக்கம்.அந்தக் காதல் அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களே படத்தின் கதை.


நாயகன், நாயகி

நாயகன், நாயகி

படத்தின் நாயகன் பாலகிருஷ்ணன் மற்றும் நாயகி வாமிகா இருவரும் மிகவும் திறமைசாலிகள். 2 பேருமே படத்தில் முக்கியமான வேடங்களை ஏற்று நடித்து இருக்கின்றனர். நாயகி வாமிகா மிகவும் சாதாரணமான பெண் அல்ல, அவரது பாத்திரம் சிக்கலான ஒன்று. படத்தின் முதல் காட்சியிலேயே நாயகிக்கு காதல் வந்து விடும்.


திறந்த மனதுடன்

திறந்த மனதுடன்

இந்தப் படத்தின் ஒரு பகுதி கதையை செல்வராகவன் தான் எழுதினார். மாலை நேரத்து மயக்கம் படத்தை திறந்த மனதுடன் பாருங்கள். கண்டிப்பாக நீங்கள் இந்தப் படத்தை பார்த்ததற்காக வருத்தப்பட மாட்டீர்கள்" என்று கீதாஞ்சலி நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.


English summary
"Please Watch Maalai Nerathu Mayakkam with an open mind and I am sure you will not Regret" Director Gitanjali Selvaraghavan says in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil