For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அமேசான் ப்ரைம் மற்றும் ஏர்டெல் இணைந்து வழங்கும் 5 திரைப்படங்கள் !

  |

  சென்னை : உங்கள் 'ME' நேரத்தை சிறப்பாக மாற்ற Amazon Prime Video மொபைல் பதிப்பில் , நீங்கள் காண உகந்த ஐந்து தென்னிந்தியத் திரைப்படங்கள் இங்கே உங்களுக்கான 'ME நேரத்தை' திரைப்படம் பார்த்துக் கழிக்கத் திட்டமிட்டுள்ளீர்களா? Amazon Prime Video அறிமுகப்படுத்தியுள்ள புதிய மொபைல் பதிப்பு உங்களுக்கு இங்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

  இந்தியாவில் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட Amazon Prime Video, ஏர்டெலுடன் இணைந்து, Prime Video மொபைல் பதிப்பை (PVME) ரூ. 89 அறிமுக விலைக்கு வழங்குகிறது. ஒற்றை-பயணர் மொபைலில் மட்டும் ஸ்ட்ரீம் செய்யும் PVME திட்டம் (அதாவது உங்கள் OTT சந்தாவை இனி உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை),

  26 வயது இளம் நடிகை மர்ம மரணம்.. அவசர அவசரமாக நடந்த இறுதிச்சடங்கு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!26 வயது இளம் நடிகை மர்ம மரணம்.. அவசர அவசரமாக நடந்த இறுதிச்சடங்கு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  ஏர்டெல் பயனர்கள் SD தரத்தில் Amazon Prime video-ஐ ஒரு மாதத்திற்குச் சோதனை முறையாக இலவசமாகக் காண அனுமதிக்கிறது இப்போது உங்கள் சந்தா படங்களைப் பார்க்கும் மனநிலையில் நீங்கள் இருந்தால் Amazon Prime Video-வில் வெளியான சமீபத்திய பட்டியல் இங்கே.

  பறக்க வேண்டிய நேரம்

  பறக்க வேண்டிய நேரம்

  சிம்ப்ளிஃப்ளை டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நேர்ந்த நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டதால், சூரரைப் போற்று நிச்சயமாகப் பொழுதுபோக்கின் புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லும். இயக்குனர் சுதா கொங்கரா, சூப்பர் ஸ்டார் சூர்யா கூட்டணியில், அற்புதமான கதைப் பின்னணியில் சிறந்த பல கலைஞர்கள் நடப்பில் வெளிவந்துள்ள இப்படம் உங்களுக்கு நிச்சயம் உத்வேகம் கூட்டும். உங்கள் குறிக்கோள் மற்றும் கனவுகளை நோக்கி நகர உங்களுக்குப் புதிய சுறுசுறுப்பைத் தந்து, உச்சத்தை அடைய உழைக்க நீங்கள் உறுதியாக முன்னேறுவதை நனவாக்கும். முதல் ஃபிரேமில் இருந்து கடைசி வரை உங்கள் கவனத்தை ஈர்க்கும் ஒரு அற்புதமான படம், சூர்யா மற்றும் அபர்ணாபாலமுரளிஆகியோருடன் பறக்க வேண்டிய நேரம் இது.

  பிரத்தியேகமாக பரிமாற

  பிரத்தியேகமாக பரிமாற

  சுவையான உணவு வகைகள் மற்றும் சிரிப்பு நிறைந்த சவாரியில் நேரம் கழிக்க விரும்பினால், நீங்கள் நிச்சயமாக இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். மிடில் கிளாஸ் மெலடிஸ் ஒரு நகைச்சுவை மற்றும் குடும்பத் திரைப்படம், கதை உணவகம் நடத்தும் ஒரு தந்தை-மகன் ஜோடியின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. அவர்களின் அன்றாடப் போராட்டங்களையும் சண்டைகளையும் நகைச்சுவையான முறையில் சித்தரிப்பது, இனிமையான மற்றும் கசப்பான தருணங்கள் நிறைந்ததே வாழ்க்கை என நமக்குக் கற்பிக்கும் ஒரு பாடமாகும். எனவே, நீங்களே ஒரு தட்டை ஏந்திக்கொண்டு தயாராகுங்கள், ஏனென்றால் ஆனந்த் தேவரகொண்டா தனது புகழ்பெற்ற பம்பாய் சட்னியை Amazon Prime Video-வில் பிரத்தியேகமாக உங்களுக்காகப் பரிமாற தயாராக இருக்கிறார்.

  ஆச்சரியத்தில் ஆழ்த்தி

  ஆச்சரியத்தில் ஆழ்த்தி

  நமது தேவசேனா (அனுஷ்கா ஷெட்டி), த்ரீ இடியட்ஸ்-இல் ஒருவருடன் (ஆர் மாதவன்) இந்த த்ரில்லர் திரைப்படத்தில் திரும்பி வந்துள்ளார். தவக்கம் முதல் உங்களை இருக்கையின் நுனியின் பரபரப்போடு காத்திருக்க வைக்க வல்ல சிறந்த கதையாகும். நாடகம், சஸ்பென்ஸ் மற்றும் உணர்ச்சிகளின் அனைத்துக் கூறுகளும் மிகச்சரியாகக் கலந்து வழங்கப்பட்டுள்ளது. எனவே, மர்மங்கள் நிறைந்த படத்தைப் பார்க்க ஆவலோடு தேடுகிறீர்கள் என்றால், இங்கே வாருங்கள், இந்தப் படம் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மௌனமாக்கிவிடும்.

  ஓவியக் கலை

  ஓவியக் கலை

  அழகு சொட்டும் இடங்கள் மற்றும் அற்புதமான நிலப்பரப்புகளால் நிரப்பப்பட்ட இந்தத் திரைப்படம் நம்மை கனவு உலகத்திற்கே அழைத்துச் செல்லும். ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளிவந்துள்ள இந்தப் படம் உங்களை இந்தியாவின் அற்புதமான நிலப்பரப்பில் சுற்றுப்பயணம் போல அழைத்துச் செல்லும் என்பது மிகையல்ல. இதில் காட்சிப்படுத்தப்படும் பசுமையான பூமி, தெள்ளத் தெளிவான வான் பரப்பு மற்றும் பாரம்பரியம் நிறைந்த சுற்றுப்புறம் ஆகியவை இப்போதே உங்களை இதுவரை அறிந்திராதஆராயப்படாத கிராமப்புறத்தை நோக்கி பயணிக்கத் தூண்டும். ஒரு ஓவியக் கலைஞர் மற்றும் அவரது கலை பற்றிய ஒரு திரைப்படமே மாறா. வண்ணமயமான ஓவியங்கள், சுவரோவியங்கள், படைப்புத் திறனை வெளிக்காட்டும் மண் சிலைகள் போன்றவை கண்களுக்கு விருந்தளிக்கின்றன, படத்தின் படைப்பு மற்றும் காட்சி அம்சத்தைப் பார்த்து நாம் மெய்மறந்து நிற்போம் என்பது உறுதி. அதனுடன் கலையின் உதவியோடு எவ்விதக் குறைகளும் இன்றி விவரிக்கப்பட்டுள்ள ஒரு கதையுடன் கூடிய மாறா திரைப்படம் போன்ற ஒன்றை முன்பே காணாமல் விட்டுவிட்டோமே என்ற என்ன ஓட்டத்தை உங்களுக்குள் எழுப்பும் படம் இது.

  தடுமாறிக் கொண்டிருந்த வேலையில்

  தடுமாறிக் கொண்டிருந்த வேலையில்

  லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்புக்கு அதிக வாய்ப்பு இல்லாத நிலையில், நடத்திக் காட்டும் துணிவு இருந்தால், தனித்துவமான நுட்பங்களைக் கொண்டு எவ்வாறு எளிதாகத் திரைப்படம் தயாரிக்கலாம் என அனைவருக்கும் எடுத்துக் காட்டும் படமே சி யூ சூன்(இயக்குனர், ஆசிரியர் ஆக விரும்புவோர் - இந்தப் படம் நம் அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் படம்). ஒரு நல்ல திரைப்படத்த்துக்கான அனைத்து அம்சங்களும் எவ்விதக் குறையுமின்றி இப்படத்தில் வெளிக்காட்டப்பட்டுள்ளது. ஃபஹத்ஃபாஸலின் கதாபாத்திரமாகவே மாறிவிட்ட நடிப்பும் சரி, தனித்துவமான மற்றும் உறுதியான கதையும் சரி, தொற்றுநோய் தாக்கத்தில் நாம் தடுமாறிக் கொண்டிருந்த வேலையில், வீட்டில் அடைபட்டு அழுத்தம் கொண்டிருந்த வேளையில் நம்மிடையே வெளிவந்து நல்ல கதையும், ஒரு சிறந்த படத்தை உருவாக்கும் தொலைநோக்கும் இருந்தால் திரைப்படங்களை எந்நேரத்திலும் உருவாக்க முடியும் என்பதை இந்தத் திரைப்படம் நிரூபித்துள்ளது.

  English summary
  Watch movies on Amazon Prime and Airtel
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X